கருப்பு கலர்ல.. ரோட்ல வந்த பெரிய "உருவம்".. பார்க்கவே பயமா இருக்கே.. ஆஸ்பத்திரியில் ஒருத்தர் அட்மிட்
திருவனந்தபுரம்: விஷ்ணு என்ற இளைஞருக்கு ஏற்பட்ட சம்பவம், கேரளாவில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடந்தது?
தமிழகம், உட்பட பல்வேறு மாநிலங்களிலுள்ள வனப்பகுதிகளில், விலங்குகளின் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.. காலநிலை மாறுபாடு காரணமாக, புலி, யானை, சிறுத்தை போன்ற பயங்கரமான விலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி, ஊருக்குள் வந்துவிடுகின்றன.

வனப்பகுதி: இந்த விலங்குகள், மனிதர்களுக்கு பலவகைகளில் தொந்தரவு தருகின்றன.. பல நேரங்களில் கொடுமையாக தாக்கி கொன்றுவிடுகின்றன. வனவிலங்குகளை ஊருக்குள் வராதவாறு தடுக்குமாறு, அந்தந்த மாநிலங்களின் வனப்பகுதியை ஒட்டியிருக்கும் கிராம மக்கள், தொடர் கோரிக்கைகளை விடுத்து வருகிறார்கள். எனினும், உயிரிழப்புகள் பெருகி வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு கொடுமை நடந்தது.. வயநாடு அருகிலுள்ள மணந்தவாடி குடியிருப்பு பகுதிக்குள் ஒரு மக்னா யானை நுழைந்துவிட்டது.. விடிகாலையில், ரோட்டில் நடந்து கொண்டிருந்த அந்த யானை, எல்லா தெருக்களுக்குள்ளும் ஆவேசமாக நுழைந்தது.. இதனால் யானையை பார்த்ததுமே, பொதுமக்கள் அலறிஅடித்து ஓடினார்கள்.
அஜி மரணம்: அஜி என்ற 42 வயது நபர், யானையை பார்த்து பயந்து ஒரு வீட்டுக்குள் ஓட முயன்றார்.. ஆனால், அந்த மக்னா யானை, காம்பவுண்ட் சுவரை இடித்துக்கொண்டு, வாசலிலிருந்த இரும்பு கேட்டையும் உடைத்து கொண்டு, வீட்டிற்குள் புகுந்து, அஜியை தூக்கி போட்டு மிதித்தது. இதில், அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதனால், அந்த பகுதி முழுவதுமே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றாலும், பொதுமக்கள் கடுங்கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்த மக்னா யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டிருந்தும்கூட, வனத்துறையினர் எப்படி அசால்ட்டாக விட்டுவிட்டார்கள்? முறையாக கண்காணிக்க தவறிவிட்டார்களே? என்று பொதுமக்கள் ஆவேசமாக குற்றஞ்சாட்டினார்கள்.
மலைப்பகுதி: இதோ இன்னொரு கொடுமை நடந்துள்ளது.. பத்தனம்திட்டா மாவட்டம் அருகே உள்ளது ரன்னி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் விஷ்ணு சசி.. இவருக்கு 26 வயதாகிறது..
உத்திமூடு கிராமத்துக்கு இவர் தன்னுடைய பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது அங்கிருந்த மலைப்பகுதியையும் கடக்க நேரிட்டபோது, திடீரென ஒரு முள்ளம்பன்றி வந்துள்ளது.. மிகப்பெரிய உருவத்துடன், அந்த முள்ளம்பன்றி காட்சி தந்துள்ளது. சாலையை கடப்பதற்காக அந்த முள்ளம்பன்றி வந்துள்ளது..
ஆனால், அந்த நேரம்பார்த்து, விஷ்ணுசசியின் பைக் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்துவிட்டது.. ரோட்டில் நின்றுகொண்டிருந்த முள்ளம்பன்றியின் மீதும் பலமாக மோதிவிட்டது. தன்மீது பைக் ஏறியதுமே முள்ளம்பன்றி அதிர்ச்சியடைந்து விட்டது. அதனால், தற்காப்புக்காக தன்னுடைய உடலில் இருந்து முட்களை விஷ்ணுவின் மீது சரமாரியாக வீசியது.. இந்த முட்கள், விஷ்ணுவின் நெஞ்சிலேயே பலமாக குத்தி கிழித்தது..
ரத்த வெள்ளம்: இதனால், வலியால் அலறித்துடித்த விஷ்ணு அங்கேயே சரிந்து விழுந்தார்.. ஆனால் முள்ளம்பன்றியோ மறுபடியும் காட்டுக்குள்ளேயே ஓடிவிட்டது. சாலையில் ரத்த வெள்ளத்தில் விஷ்ணு உயிருக்கு போராடியதை பார்த்ததுமே, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்..
விஷ்ணுவின் நெஞ்சுப்பகுதி, முள்ளம்பன்றியின் முட்களால் பயங்கரமாக சேதமாகியிருந்தது.. அதனால், டாக்டர்கள் உடனடியாக ஆபரேஷன் செய்தார்கள்.. நெஞ்சுக்குள் மொத்தம் 15 முள்ளம்பன்றியின் முட்கள் உள்ளே புகுந்திருந்ததாம். அத்தனையையும் ஆபரேஷன் செய்து வெளியே எடுத்தனர்.. அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.இப்போது, விஷ்ணு அபாய கட்டத்தை தாண்டி விட்டாராம்.
முட்களே ஆதாரம்: விஷ்ணுவின் குடும்பத்தினர் இது தொடர்பாக வனத்துறையில் புகார்அளிக்க முடிவு செய்துள்ளனர். அந்த புகாரில், விஷ்ணுவின் உடலிலிருந்து
எடுக்கப்பட்ட முட்களை ஆதாரமாக சமர்ப்பிக்க போகிறார்களாம். இந்த சம்பவம் கேரளாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications