குமட்டும் ஆபாசம்.. சுற்றிலும் அத்தனை பேர்.. சொல்ல சொல்ல கேட்கலயே.. இப்ப அந்த சார் "மாமியார்" வீட்டிலே
திருவனந்தபுரம்: ஒரு ஆபாசப்பேர்வழியை தூக்கி ஜெயிலில் வைத்துள்ளனர் நம்முடைய போலீசார்.. அப்படி என்ன நடந்தது ஓடும் ரயிலில்?
நம்ம ஊரில்தான் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்துள்ளார்கள்.. ஆனால், பெங்களூரில் இந்த பைக் டாக்சிகளுக்கு படுகிராக்கி உள்ளது. அந்தவகையில், கடந்த வாரம், பெங்களூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது..
சம்பவத்தன்று இரவு, பெங்களூரை சேர்ந்த அதிரா என்ற இளம்பெண் டவுன் ஹாலில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக ரேபிடோ பைக் டாக்சியை புக் செய்திருக்கிறார்.

பைக் டாக்சி: இதையடுத்து, கொஞ்ச நேரத்திற்கெல்லாம், ரேபிடோ டாக்சி அங்கு வந்து நின்றுள்ளது. அதில், அதிரா ஏறியிருக்கிறார். அந்த பைக் சிறிது தூரம் சென்றதுமே. அந்த பைக் டாக்சியின் ஓட்டுநர் சுய இன்பம் செய்ய ஆரம்பித்துவிட்டாராம். இதை பார்த்து அந்தப்பெண் பதறிவிட்டார்.. ஆனாலும் பயந்துகொண்டு, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார்.
பிறகு, குறிப்பிட்ட இடத்தில் அதிராவை இறக்கிவிட்டு பைக் டாக்சி டிரைவர் கிளம்பி போய்விட்டார். ஆனால், விவகாரம் அத்துடன் விடவில்லை.. அந்த டிரைவர் உடனே ஆபாச மெசேஜ்களை, அதிராவுக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டார்..
ஆபாச மெசேஜ்: அன்னைக்கு நைட் முழுவதும் கண்ட, கண்ட மெசேஜ்கள் வந்து கொண்டேயிருந்ததாம். பிறகு, அதிரா போலீஸில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீஸார் டிரைவரை கைது செய்தனர். அந்த அசிங்கம் அடங்குவதற்குள் இன்னொரு அசிங்கம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரளாவில் கோயம்புத்தூர் - மங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் மாணவிகள் நிறைய பேர் பயணம் செய்துள்ளனர்.. அப்போது, அவர்களுக்கு இருந்த சீட்டின் முன்புறம், சுயஇன்பம் செய்ய ஆரம்பித்துவிட்டாராம்.. ஓடும் ரயிலிலேயே இப்படி ஒரு காரியத்தை அந்த நபர் செய்ததால், அதிர்ச்சி அடைந்த மாணவிகள், ஆத்திரமும் அடைந்துள்ளனர். உடனே அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.. ஆனால் அந்த நபரோ, எதைப்பற்றியும் கவலையேப்படவில்லை.
ஆபாச செயல்: இதனால் அங்கிருந்த சக பயணிகளும் மாணவிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பி உள்ளனர். அதையும் அந்த நபர் கண்டுகொள்ளவுமில்லை.. காதிலேயே போட்டுக் கொள்ளவுமில்லை.
இறுதியில், அங்கிருந்த சில மாணவிகள், ஆசாமியின் ஆபாச செயலை செல்போனில் வீடியோ எடுத்தனர். காசர்கோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தவுடன் போலீசாரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். வீடியோ ஆதாரத்தையும் போலீசாரிடம் மாணவிகள் காட்டினார்கள்.. பிறகு, விசாரணை ஆரம்பமானது.. அந்த நபர் பெயர் ஜார்ஜ்.. கண்ணூரை சேர்ந்தவராம்.. இப்போது ஜார்ஜ் ஜெயிலில் உள்ளார்..
எல்லைமீறல்கள்: நாளுக்கு நாள் பொதுஇடங்களில் ஆபாச செயல்கள் அதிகரித்து வருகின்றன.. டெல்லி மெட்ரோ, மும்பை என பெருநகங்களில் மட்டுமே பொதுவிடங்களில் இப்படியான எல்லைமீறல்கள் நடந்துவந்த நிலையில். இப்போது தென்மாநிலங்களிலும் நடக்க ஆரம்பித்துவிட்டன.. பைக் டாக்ஸிகளிலும், ஓடும் ரயில்களிலும், இந்த காமப்பேர்வழிகள் இப்படியான கேடுகெட்ட செயல்களை செய்து கொண்டிருந்தால், பொதுமக்கள் எப்படித்தான் நம்பி பயணம் செய்வது?? காவல்துறைதான், இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications