என்னங்க இது? திடீரென சென்னையிலிருந்து கேரளாவிற்கு போன வந்தே பாரத்.. அதுவும் ஆரஞ்ச் கலர்.. ஏன்?
திருவனந்தபுரம்: நேற்று சென்னையில் இருந்து கேரளா நோக்கி ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் சென்றது. இந்த பயணத்திற்கு பின் முக்கியமான காரணம் உள்ளது.
சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வழியாக மைசூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

இந்த ரயில் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை - கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக இந்த மாதம் முழுக்க பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.
அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும். அதேபோல் வரும் 24ம் தேதி சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் தொடங்க உள்ளது.
திருவனந்தபுரம் ரயில்: அதேபோல் சமீபத்தில் கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை இயக்கப்படும்.
ஆனால் இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்ல 8 மணி நேரம் 5 நிமிடங்கள் ஆகும். முதல் நாள் பயணத்தில் இது சரியாக 8 மணி நேரம் 5 நிமிடங்கள் வரை எடுத்துக்கொண்டது. கிட்டத்தட்ட 68 கிமீ வேகத்தில்தான் இந்த ரயில் பயணம் செய்தது.
இந்த ரயிலில் சென்றால் விரைவாக சென்றுவிட முடியும் என்று நினைத்த பயணிகள் பலரும் பயண நேரத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். முன்னதாக சோதனை ஓட்டத்திலேயே இந்த ரயில் தாமதமாக வந்தது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் - கன்னூர் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்திலேயே 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளது. திருவனந்தபுரம் - கன்னூர் வந்தே பாரத் ரயில் 7. 20 மணி நேரத்தில் திருவனந்தபுரம் ஸ்டேஷனில் இருந்து கன்னூர் வந்தே பாரத் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது .
இந்த ரயில் வெறும் 70 கிமீ வேகத்தில்தான் பயணம் செய்துள்ளது. கன்னூரில் பிற்பகல் 2.10க்கு தொடங்கி இரவு 9.30 மணிக்குத்தான் இந்த ரயில் திருவனந்தபுரம் வந்துள்ளது. இந்த ரயில்சேவை தற்போது நடைபெற்று வரும் நிலையில்தான், நேற்று சென்னையில் இருந்து கேரளா நோக்கி ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் சென்றது. இந்த பயணத்திற்கு பின் முக்கியமான காரணம் உள்ளது.
இந்த ஆரஞ்ச் நிற ரயில் திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டது. இங்கிருந்துதான் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து காசர்கோடு வரை வரும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும். இதன் காரணமாகவே சென்னையில் இருந்து கேரளாவிற்கு வந்தே பாரத் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications