சிஏஏவை ஆயுதமாக எடுக்கும் இடதுசாரிகள்.. கேரளாவில் சிக்குவது பாஜக மட்டுமில்லை காங்கிரஸும் தான்! எப்படி
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள இடதுசாரிகள் சிஏஏ சட்டத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதை வைத்து அவர்கள் பாஜக மட்டுமின்றி காங்கிரஸையும் எதிர்க்கிறார்கள்.
கடந்த 2019இல் மத்திய பாஜக அரசு சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் பிறகு சுமார் 5 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் தான் அந்த சட்டத்தை அமல்படுத்துவதாக மத்திய பாஜக அரசு அறிவித்தது.

இருப்பினும், சில மாநில அரசுகள் சிஏஏவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஏற்கனவே சிஏஏவை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.
சிஏஏ சட்டம்: இதில் சிஏஏ விவகாரத்தை லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய விஷயமாக எடுத்துச் செல்ல கேரளாவில் இடதுசாரிகள் அரசு திட்டமிட்டுள்ளது. கேரள அரசு ஏற்கனவே தங்கள் மாநிலத்தில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கடந்த 2020இல் அம்மாநிலச் சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றி இருந்தது. மேலும், என்ஆர்சியை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளனர். இந்தச் சூழலில் தான் அவர்கள் லோக்சபா தேர்தலில் இதை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அசாம், மேற்கு வங்கத்தைப் போலக் கேரளாவில் சிஏஏவால் பாதிக்கப்படக்கூடிய மக்கள் அதிகம் இல்லை. அப்படி இருக்கும் போது ஏன் சிஏஏ விவகாரம் என்ற கேள்வி வரலாம். இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "சிபிஎம் தனது தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்த நேரத்தில் இடதுசாரிகளுக்குக் கணிசமான இடங்களை வழங்கும் ஒரே மாநிலம் கேரளா மட்டுமே" என்றார். சிபிஎம் ஏற்கனவே மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களை இழந்துவிட்டது.

கேரளாவில் கடும் போட்டி: கேரளாவில் காங்கிரஸிடம் இருந்து போட்டி கடுமையாக இருக்கும் நிலையில் தான் அவர்கள் சிறுபான்மையினர் வாக்குகளைக் கவர இதைக் கையில் எடுத்துள்ளனர். 20 லோக்சபா இடங்களைக் கொண்ட கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மொத்தமாக 19 இடங்களை அள்ளி இருந்தது. ஆனால், இந்த முறை அப்படி நடக்கக் கூடாது என்பதற்காகவே இடதுசாரிகள் சிஏஏ விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.
கேரளாவைப் பொறுத்தவரை அங்கே உள்ள மக்கள் தொகையில் சுமார் 27% பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். அவர்கள் வாக்கு இடதுசாரிகளுக்குத் தேவை என்பதாலேயே இந்த பிரச்சார யுக்தி. வட கேரளாவின் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் போன்ற மாவட்டங்கள் முஸ்லிம்களின் குறிப்பிடத்தக்க அளவுக்கு உள்ளனர்.
ராகுல் காந்தி: 2019இல் ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியில் சுமார் 41% இஸ்லாமியர்களும் 14% கிறிஸ்தவர்களும் உள்ளனர். கேரளாவில் சிறுபான்மை வாக்குகளைக் காங்கிரஸ் பக்கம் கொண்டு வந்ததில் ராகுல் காந்திக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை மறுக்கவே முடியாது. இந்த முறையும் கூட அதேபோன்ற ஒரு சூழலே ஏற்பட்டு இருக்கிறது.
மத்திய அரசின் செயல்பாடுகளால் அங்குள்ள சிறுபான்மை வாக்காளர்கள் கோபத்தில் உள்ளனர். அவர்களுக்கு இப்போது காங்கிரஸ் கூட்டணி மற்றும் இடதுசாரிகள் கூட்டணி என இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. இருப்பினும் இடதுசாரிகள் மத்தியில் பாஜகவுக்குப் போட்டியாக இல்லை. எனவே, அவர்கள் வாக்குகள் காங்கிரஸ் பக்கம் செல்ல வாய்ப்புகள் அதிகம். இதற்குப் பதிலாகக் கேரளாவில் இடதுசாரிகளை ஒரு பதிலை முன்வைக்கிறார்கள்.
என்ன காரணம்: அதாவது பாஜகவை சிஏஏ சட்டத்திற்காக விமர்சிக்கும் இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியும் கூட சாப்ட் இந்துத்துவா கொள்கையையே பின்பற்றி வருவதாக விமர்சித்து வருகிறார்கள். இது தேர்தலில் கை கொடுக்கும் என்றும் நம்புகிறார்கள். மேலும், கேரளாவில் இப்போது முதல்வர் பினராயி விஜயன் மற்றும் இடதுசாரிகள் அரசின் மீது மக்கள் அதிருப்தி அதிகமாக இருக்கிறது. அதையும் சிஏஏ எதிர்ப்பு பிரச்சாரம் மூலம் சமாளிக்கலாம் என்பதே இடதுசாரிகள் யுக்தியாக இருக்கிறது.
20 லோக்சபா இடங்களைக் கொண்ட கேரளாவில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 26ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. சிஏஏ எதிராகத் தொடர்ந்து பேசி வரும் இடதுசாரிகளால் அங்கே கடந்த 2019 தேர்தலைக் காட்டிலும் அதிக வாக்குகளைப் பெற முடியும் என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால், இடதுசாரிகளின் இந்த நிலைப்பாடு உண்மையில் என்ன பலனைத் தரும் என்பது ஜூன் 4ஆம் தேதி தெரிந்துவிடும்.
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications