திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்கிட்ட பேசுன மாதிரி கேரள எம்.பிகிட்ட பேச முடியுமா?.. ஸ்ட்ரிக்ட் எஸ்.பிக்கு பொன்னார் பொளேர்!

கேரளா எஸ்.பி தன்னிடம் கோபமாக நடந்து கொண்டது குறித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா எஸ்.பி தன்னிடம் கோபமாக நடந்து கொண்டது குறித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

நேற்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிந்து சபரிமலை கோவிலுக்கு சென்றார். ஆனால் அவர் தொண்டர்களுடன் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தன்னை தடுத்து நிறுத்திய கேரள போலீஸ் யதீஷ் சந்திரா ஐபிஎஸ்ஸுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் பாஜகவிற்கு ஹீரோ.. ஒரே நாளில் வில்லன்.. பொன்னாரை தடுத்த ஐபிஎஸ் யார் தெரியுமா? ஒரு காலத்தில் பாஜகவிற்கு ஹீரோ.. ஒரே நாளில் வில்லன்.. பொன்னாரை தடுத்த ஐபிஎஸ் யார் தெரியுமா?

கோபமாக பேட்டி

கோபமாக பேட்டி

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். அதில் நான் பலமுறை சபரிமலையில் தரிசனம் செய்து இருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட இப்படி நடந்தது இல்லை. கோவிலில் பெரிய அளவில் எப்போதும் அமைதி இருக்கும். அந்த அமைதி இப்போது சபரிமலையில் கொஞ்சம் கூட இல்லை. கோவில் முழுக்க பக்தர்களை விட போலீஸ்தான் அதிகம் இருக்கிறார்கள்.

அனுமதி

அனுமதி

சில சமயம் போலீஸ் எங்களை ''சாமி சரணம்'' என்று கோஷம் எழுப்ப கூட அனுமதிக்க விடுவதில்லை. அந்த கோஷம்தான் மக்களை ஒருமுகப்படுத்தும். ஆனால் அதற்கு கூட எங்களை அனுமதிப்பதில்லை. போலீஸ் சர்வாதிகாரம் செய்கிறது. இந்த கோவில் கேரளாவிற்கு உரியது கிடையாது, இது மக்களுக்கானது, இது உலகிற்கானது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

கேரள போலீஸ் சபரிமலையில் ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்று தெரியவில்லை. சபரிமலையில் எதற்கு 144 தடை உத்தரவு இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த தடையை உடனடியாக கேரள அரசு நீக்க வேண்டும். பக்தர்களை இப்படி தொல்லை செய்ய கூடாது.

எல்லோரிடமும் பேசுவாரா?

எல்லோரிடமும் பேசுவாரா?

என்னிடம் கோபமாக பேசிய கேரள எஸ்.பி யதீஷ் சந்திரா ஐபிஎஸ் எல்லோரிடமும் அப்படி பேசுவாரா?, முக்கியமாக கேரளா அமைச்சர்களிடம் அப்படி அவரால் பேச முடியுமா? கேரள போலீஸ் பாஜக தலைவர்களிடம் பாகுபாடுடன் நடந்து கொள்கிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Will he dare to talk against Kerala MP's like this asks Pon. Radhakrishnan to SP Yathish Chandra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X