ஊரடங்கால் மனைவியை பார்க்க முடியவில்லை..பேருந்தையே திருடிக்கொண்டு கிளம்பிய இளைஞர்..கேரளாவில் பரபரப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மனைவி மற்றும் குழந்தையைத் தனியார் பேருந்தையே ஒருவர் திருடிச் சென்ற ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த வாரம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய போலீசார் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மனைவி மற்றும் குழந்தையைத் தனியார் பேருந்தையே ஒருவர் திருடிச் சென்ற ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பேருந்தைத் திருடிய நபர்
கேரளாவில் 30 வயதான பினூப் என்பவர் ஊரடங்கு காரணமாகத் தனது மனைவியும் குழந்தையையும் பார்க்க முடியாமல் கவலையில் இருந்துள்ளார். மாநிலத்தில் பொது போக்குவரத்திற்கும், அத்தியாவசியமற்ற போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பினூப் கோழிக்கோட்டில் நின்றிருந்த தனியார் பேருந்தையே திருடிவிட்டார். பினூப் தனது குடும்பத்தினரைப் பார்க்க வேண்டும் என அந்த பேருந்தைத் தனியொரு ஆளாக ஓட்டிச் சென்றுள்ளார்.

பேலீசாரிடம் புது விளக்கம்
வழியில் இரண்டு இடங்களில் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அவர்களிடம் பத்தனம்திட்டாவிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வரச் செல்வதாகக் கூறியுள்ளார். இதனால் போலீசாருக்கு அவர் மீது எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. இப்படியே அந்த நபர் மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களை கடந்துள்ளார்.

போலீசார் சந்தேகம்
கோட்டயம் மாநிலத்தில் குமரகம் போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். பேருந்தில் அவர் மட்டும் இருந்ததாலும், எந்த ஆவணங்களும் இல்லாததால் சந்தேகம் அடைந்த போலீசார், பேருந்தின் உரிமையாளர் யார் என்பது குறித்த தகவல்களைத் திரட்ட தொடங்கியுள்ளனர். அப்போது பேருந்தைத் திருடியதை பினூப் உண்மையை ஒப்புக் கொண்டார். அவர் மீது ஏற்கனவே, இரண்டு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

முதல்முறை இல்லை
கடந்த மூன்று மாதங்களில் கேரளாவில் ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு பேருந்து திருடப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக சில மாதங்களுக்கு முன்னர் கொல்லம் பகுதியில் டிப்போவுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த அரசுக்குச் சொந்தமான பேருந்தை ஒருவர் திருடிச் சென்றார். அந்தப் பேருந்து பரிப்பள்ளி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications