தூத்துக்குடி சுங்கச்சாவடி விஐபி லேனில் புது கார்.. டோல்கேட் ஊழியர்களுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள சுங்கசாவடியில் வழக்கமாக செல்லும் வழியில் செல்லாமல் விஐபி வாகனங்கள் செல்லும் வழியே சென்ற புதிய கார் ஒன்றினை மறைத்து இந்த வழியில் செல்ல கூடாது என கேட்டுள்ளனர் சுங்கசாவடி ஊழியர்கள். ஆனால் புத்தம் புதிய காரில் வந்தவர்கள், பாஸ்டேக் இல்லை என்று கூறியுள்ளனர். அப்போது நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்..

தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையான என்ஹெச் 138 சாலையில் தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை - வாகைகுளம் பகுதியில் சுங்கச்சாவடி இருக்கிறது.. இந்த வாகைகுளம் சுங்கச்சாவடி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. பாஸ்டேக் மின்னணு முறையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம், அதேபோல சுங்கச்சாவடியைச் சுற்றியுள்ள 20 கி.மீ சுற்றளவில் வசிக்கும் உள்ளூர் பொதுமக்களின் வணிகமல்லாதா சொந்த வாகனங்களுக்குக் குறைந்த கட்டணத்தில் மாதாந்திர பாஸ் வசதி உள்ளது. வெறும் 350 ரூபாய் என்கிற அளவில் தான் மாத கட்டணமே இருக்கும்.

Thoothukudi toll plaza

இந்த சுங்கச்சாவடியில் விஐபிக்களான குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் போன்றவர்கள் மற்றும் அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம்) செல்வதற்காகப் பிரத்யேகமாக பாதைகள் உள்ளது. இந்த வழியில் அடையாளங்களை சரிபார்த்த பின்னர் உடனடியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் அந்த சுங்கச்சாவடி வழியே இன்று காலை அதிவேகமாக புதிய கார் ஒன்று வழக்கமான வழியே செல்லாமல் விஐபி கார்கள் செல்லும் வழியே சென்றதை கண்ட அந்த சுங்க சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் காரை போகவிடாமல் பாதையை மறைத்துள்ளனர். அப்போது இந்த வழியே வரக்கூடாது என்றும் அதைபோல் ரசீது பெற்று பணம் செலுத்துங்கள் என கேட்டதற்கு, அதற்கு புதிய கார் என்பதால் பாஸ்ட்ராக் ஸ்டிக்கர் பெறவில்லை என அந்த காரில் இருந்தவர்கள் கூறி உள்ளனர்.

அதற்கு அந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் நாங்கள் பாஸ்ட்ராக் ஸ்டிக்கர் தருகிறோம் ஒட்டிகொள்ளுங்கள் அல்லது சுங்கச்சாவடி வழியே வந்த காரணத்திற்காக ரசீது போட்டு பணம் செலுத்திவிட்டு செல்லுங்கள் என கூறியதால் இரு தரப்புக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது காரில் வந்த நபர்கள் சுங்கசாவடி ஊழியர்களை கடுமையாக தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகின்றது.இது தொடர்பாக புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+