வறண்ட பகுதியில் வற்றாத மர்ம சிற்றோடை! 18 சித்தர்கள் தவம் இருந்த அதிசய சுனை.. திருச்சியில் நெகிழ்ச்சி
திருச்சி: திருச்சி அருகே ஒரு வறட்சியான பகுதியில் பாறைகளுக்கு நடுவே தண்ணீர் வடியும் சிற்றோடை இருக்கிறது. ஆனால் இந்த நீர் எங்கிருந்து வருகிறது என யாருக்கும் தெரியாது. ஆண்டுதோறும் வற்றாமல் வந்து கொண்டே இருக்கும்.
உலகில் நிறைய இயற்கை வளங்கள் ஏன் எப்படி என தெரியாத அளவுக்கு கொட்டி கிடக்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றிற்கு ஆதி, அந்தம் இருக்கும். ஆனால் சிலவற்றிற்கு எங்கிருந்து உருவாகிறது என்பது தெரியாது, எங்கே முடிகிறது என்பது கூட தெரியாது. அந்தளவுக்கு அதிசயங்களும் நிரம்பி இருக்கும்.

அந்த வகையில் திருச்சி அருகே ஒரு அதிசயம் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் சென்று அங்கிருந்து இடதுபுறமாக திரும்பி அக்கரைப்பட்டி கிராமத்திற்கு செல்ல வேண்டும். இந்த கிராமத்தில் கல்லுப்புலியான கோயில் உள்ளது.
இந்த கோயிலுக்கு பக்கத்தில்தான் இந்த அதிசய சிற்றோடை இருக்கிறது. இந்த கோயில் மட்டும் அல்ல இந்த பகுதி முழுவதுமே வெறும் பாறாங்கற்களாலும் முட்புதர்களாலும் காணப்படுகிறது. இந்த கோயிலில் நிறைய சினிமா படங்கள் எடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அந்த வகையில் நடிகர் விமல்- நடிகை இனியா நடித்த வெப்சீரிஸான விலங்கு படத்தின் முக்கிய சீன்கள் இந்த கல்லுப்புலியான் அய்யனார் கோயிலில்தான் எடுக்கப்பட்டது.

இந்த கோயிலை ஒட்டியிருக்கும் பாறை குவியலுக்கு இடையில்தான் இந்த அதிசய நீர் ஊற்று இருக்கிறது. இந்த ஊற்றில் வரும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை. ஆனால் இந்த தண்ணீர் அத்தனை சுத்தமாகவும் குடிப்பதற்கு ருசியாகவும் இருக்கும். இந்த கோயிலில் சுவாமி சிலையை சுத்தப்படுத்த இந்த தண்ணீரைதான் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதை ஒரு புனித நீராகவே மக்கள் கருதுகிறார்கள். ஊற்றில் இருந்து வரும் நீரை பாத்திரத்தில் சேகரிக்க ஏதுவாக ஒரு பைப் இருக்கிறது. அதன் மூலம் அவர்கள் தண்ணீரை பிடித்துக் கொண்டு செல்கிறார்கள். இது அதிசய நீரூற்றாகவே பார்க்கிறார்கள். இந்த ஊற்று இருக்கும் இடத்தில் 18 சித்தர்களும் தவம் இருந்த இடம் என்பதால்தான் அங்கு தற்போது வற்றாத சுனையாக உள்ளது என தெரிவிக்கிறார்கள்.

இந்த நீருற்று எந்த காலத்திலும் வற்றாமல் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இந்த கோயிலுக்கு உண்டான சக்தி நீரூற்றில்தான் இருக்கிறது. இதனால் இந்த நீரை புனித நீராக கருதுகிறார்கள். இந்த நீரோடையில் கல் இச்சி மரம் இருக்கிறது. அது போல் பாறையில் இருக்கும் கல்லுபுலியான் கோயில் மேல் பகுதியிலும் கல் இச்சி மரம் இருக்கும்.
சுனை நீரூற்று அருகே 2 பனைமரம் உள்ளது. அங்கு கருப்புசாமி இருப்பதாக கூறுகிறார்கள். இதனால் இந்த தண்ணீரை தவறாக பயன்படுத்தவே பலர் அச்சப்படுவார்கள். இந்த பகுதியில் சமூக விரோத செயல்களும் நடக்காத வண்ணம் கல்லுபுலியான் காப்பாற்றி வருவதாக மக்கள் நம்புகிறார்கள். இங்கு அண்மையில் மதுபிரியர்கள் இந்த தண்ணீரைப் பிடித்து குடித்த போது அவர்களுக்கு உடல் உபாதைகளை தந்ததாக கூறுகிறார்கள் அப்பகுதியினர்.













Click it and Unblock the Notifications