Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடவுளின் தேசத்திற்கு சுற்றுலா போறீங்களா.. போடி மெட்டு மலைப்பாதையில் கவனம்.. அடுத்தடுத்து 2 சம்பவம்

Subscribe to Oneindia Tamil

தேனி: கடவுளின் தேசமான கேரளாவில் மூணாறுக்கு சுற்றுலா போறீங்களா, போடி மெட்டு மலை பாதையில் அடுத்தடுத்து நடந்த இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலையில் மிகவும் கவனமாக செல்ல வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.

கடவுளின் தேசமான கேரளாவில் உள்ள மூணாறு உலக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று. இங்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இது ஒருபுறம் எனில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கொச்சின் செல்ல இந்த சாலையை பிரதானமாக பயன்படுத்துகிறார்கள். போடி மெட்டு வழியாக பூம்பாறை, ராஜாக்காடு, நேரிமங்கலம், மாவட்டுபுழாவை கடந்து சென்றால் கொச்சின் போய்விட முடியும். கோவை அல்லது பொள்ளாச்சி சுற்றி போவதைவிட இந்த பக்கம் சென்றால், மலை ஆறு மற்றும் அருவிகள், காடுகளை ரசித்தபடி செல்ல முடியும் என்பதால் பலரும் கொச்சின் செல்ல போடிமெட்டு மலைப்பாதையை பயன்படுத்துகிறார்கள்.

tour Munnar kerala

அப்படித்ததான் போடி அருகே மலைப்பாதையில் சென்ற கார் தீப்பற்றி எரிந்தது. வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்ற 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த 38 வயதாகும் கார்த்திக் ராஜா, அவருடைய நண்பர்கள் ராம்பிரகாஷ், வைஷ்ணவ் உள்ளிட்ட 3 பேரும் வியட்னாம் நாட்டில் காய்கறி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்கள். தொழில் விஷயமாக இவர்கள் அடிக்கடி வியட்னாம் நாட்டுக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி இவர்கள் 3 பேரும் வியட்னாம் செல்ல முடிவு செய்தார்கள்.

இதற்காக கேரள மாநிலம் கொச்சிக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் வியட்னாம் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதனையடுத்து 3 பேரும், தேனி மாவட்டம் போடிமெட்டு வழியாக கொச்சிக்கு காரில் புறப்பட்டனர். காரை கார்த்திக் ராஜா ஓட்டினார். போடிமெட்டு மலைப்பாதையில் 17-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று மாலை கார் சென்ற போது, காரில் இருந்து புகை மூட்டம் கிளம்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் ராஜா மலைப்பாதையோரத்தில் உடனடியாக காரை நிறுத்தினார். காரில் இருந்து 3 பேரும் கீழே இறங்கினர். மேலும் அவர்கள் தங்களது உடைமைகளை காரில் இருந்து வெளியே எடுத்தனர்.

சிறிதுநேரத்தில் கார் தீப்பற்றியது. மள, மளவென பரவிய தீ காரில் கொழுந்து விட்டு எரிந்தது. இதுபற்றி அவர்கள், போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்துவிட்டது.
இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே 3 பேரும் தங்களது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்தனர்.

போடிமெட்டு மலைப்பாதையில் நடந்த இன்னொரு சம்பவத்தில், 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து என்ஜினீயர் பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களுரூ மாவட்டம் குல்பர்கா பகுதியை சேர்ந்த 50 வயதாகும் சஞ்சீவி ரெட்டி . கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். இவர், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கேரள மாநிலம் தேக்கடி மற்றும் மூணாறுக்கு சுற்றுலா செல்வதற்காக வந்துள்ளார்.

சஞ்சீவிரெட்டி உடன் தனது மனைவி அம்பிகா (42), மகள் கீர்த்திகா (18), மகன் கரண் (11) மற்றும் உறவினர்கள் வைஷாலி (18), விஜய் (35), அவரது மனைவி ஹர்சா (24) ஆகியோருடன் மூணாறுக்கு காரில் வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர்கள் மூணாறுக்கு சென்றனர். அங்குள்ள இடங்களை சுற்றிபார்த்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு காரில் திரும்பி போய்கொண்டிருந்தனர். காரை சஞ்சீவிரெட்டி ஓட்டினார். போடிமெட்டு மலைப்பாதையில் நேற்று மதியம் கார் வந்து கொண்டிருந்தது. மலைப்பாதையின் 4-வது கொண்டை ஊசி வளைவு (எஸ்.வளைவு) பகுதியில் கார் வந்தது. அப்போது முன்னால் சென்ற வாகனத்தை, சஞ்சீவிரெட்டி முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 அடி பள்ளத்தில் கார் உருண்டு விழுந்தது.

இந்த விபத்தில் காரை ஓட்டிய சஞ்சீவிரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் காரில் பயணம் செய்த அவரது மனைவி அம்பிகா (42), மகள் கீர்த்திகா (18), மகன் கரண் (11) 6 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் கயிறு மூலம் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குரங்கணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சஞ்சீவி ரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போடி மெட்டு மலைப்பாதையில் காரில் செல்வோர் மிகவும் கவனமாக செல்ல வேண்டியது அவசியம். அந்தசாலை முழுவதும் எஸ்வடிவிலான சாலையாகும். நன்கு அனுபவம் உள்ளவர்களே இந்த சாலையில் வாகனம் ஓட்டி செல்ல முடியும். மற்றவர்களுக்கு கடினமாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே மூணாறு செல்ல வருவோர் கவனமாக வருவது நல்லது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+