‘ஆ’ என வாய் பிளக்க வைக்கும் ‘ஆனைமலை’.. கோவையன்ஸ் வீக் எண்டை கொண்டாட சூப்பரான சுற்றுலா தலம்
கோவை: வாரம் முழுவதும் வேலை செய்து சோர்வடைந்துபோன கோவை மக்கள் வார இறுதியில் புத்துணர்ச்சி அடைய சூப்பரான சுற்றுலா தலம் ஒன்று உள்ளது. அதுதான் ஆனைமலை.
மேற்கு தொடர்ச்சி மலையும், சிறுவாணி நதியும், கொஞ்சும் கொங்கு தமிழும், இயற்கை எழில் நிறைந்த சூழலும் கோவை மாவட்டத்துக்கு பேரழகு. அத்துடன் சென்னையோடு போட்டிப்போடும் அளவுக்கு கோவை மாநகராட்சி மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகள் பெரும் வளர்ச்சியை கண்டு வருகின்றன. ஏராளமான மென்பொருள் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அங்கு தோன்றிவிட்டன. எப்போதும் பரபரப்பு நிறைந்த பகுதியாக கோவை உருமாறி இருக்கிறது.

பொருளாதாரத்துக்கான தேடல், பணி அழுத்தம் என ஒருவித பரபரப்புடனே நகர வாழ்க்கையில் ஓடிக்கொண்டு இருக்கும் மக்களின் மனதையும் உடலையும் புத்துணர்ச்சி அடைய வைக்க பல்வேறு சுற்றுலா தலங்கள் கோவையை சுற்றிலும் அமைந்து உள்ளன. அதில் முக்கியமான சுற்றுலா தலம்தான் ஆனைமலை. பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 67 கிமீ தொலைவிலும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 70 கிமீ தொலைவிலும், கோவை விமான நிலையத்தில் இருந்து சுமார் 118 கிமீ தொலைவிலும் அமைந்து இருக்கும் ஆனைமலைக்கு வார இறுதி நாட்களில் ஒரு நாள் அல்லது 2 நாட்கள் சுற்றுலா சென்று வரலாம்.

அதேபோல் வேறு மாவட்டங்களில் இருந்து வால்பாறை, ஊட்டி போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா வருபவர்களும் ஆனைமலையை தவறாமல் விசிட் செய்யலாம். குறிப்பாக டிசம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டம் ஆனைமலையை பார்வையிட சிறந்ததாக உள்ளது. ஓவராக பில்டப் கொடுக்கிறீர்களே? அப்படி என்ன இருக்கிறது ஆனைமலையில் என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கலாம். என்ன இல்லை என்ற பதில் இதை முழுதாக படித்தவுடன் உங்களுக்கு கிடைக்கும்.

ஆனைமலையின் உண்மையான பெயர் யானை மலை. கொங்கு வழக்கில் யானையை ஆனை என்று அழைத்து இப்பகுதியின் பெயரும் ஆனைமலை என்றாகிவிட்டது. ஆனைமலை வனவிலங்குகள் சரணாலயம் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஒன்றாகும். இயற்கை எழில் மிகுந்த 600 சதுர மைல் தொலைவுக்கு பரந்து விரிந்த ஆனைமலைக் காடு நகர பரப்பரப்புகளில் இருந்து வந்த உங்கள் மனதை சாந்தப்படுத்தும். இவ்வளவு பெரிய காட்டில் வனவிலங்குகள், பறவைகளுக்கு பஞ்சம் இருக்குமா என்ன? ஏராளமான அரிய விலங்குகள், பறவைகள், உயிரினங்கள் உங்கள் கண்களுக்கு தென்படலாம்.

இங்குள்ள இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயத்தில், புலிகள், சிறுத்தைகள், புனுகுப் பூனைகள், காட்டுப்பன்றிகள், புள்ளிமான்கள் போன்ற ஏராளமான வனவிலங்குகள், ராக்கெட் டெயில்ட் ட்ராங்கோ எனப்படும் துடுப்பு வால் கரிச்சான், கருந்தலை மாங்குயில் போன்றவற்றை இங்கு கண்டு வியக்கலாம்.

அதுமட்டுமின்றி வனப்பகுதிக்குள் பயணிக்கும் சுவாரஸ்யமான அனுபவமும், மலையேற்ற அனுபவத்தையும் இங்கு பெறலாம். ஆனைமலை என்று பெயர் வைத்துவிட்டு யானை பற்றி சொல்லவே இல்லையே என்று நீங்கள் எண்ணுவது தெரிகிறது. அடுத்து அங்குதான் செல்லப்போகிறோம்.

ஆனைமலையில் வரகாளியாறு யானை முகாம் உள்ளது. அங்கு சுமார் 20 யானைகள் உள்ளன. இதனை கடந்து உங்களை மெய் சிலிர்க்க வைக்கும் இடமும் ஆனைமலையில் உள்ளது. அதுதான் டாப் சிலிப். மலையின் உச்சியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையின் அழகிய காட்சியை உங்களால் கண்டு ரசிக்க முடியும். காடும், மேடும், மலையும் உங்களுக்கு பிடிக்கும் என்றால் நிச்சயம் நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஆனைமலை.

-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications