சென்னை வெயில தாங்க முடியலையா.. போடி ரயில்ல ஏறுங்க.. வெயிலே வெள்ளை கொடி காட்டும்.. சொர்க்கம் தெரியும்
தேனி: சென்னை வெயில தாங்க முடியாம பலரும் தவிக்கிறார்கள். அவர்கள் வார இறுதியில் போடி ரயிலில் ஏறி இந்த இடத்திற்கு போய் பாருங்கள். உலகத்தின் சொர்க்கம் எங்கே இருக்கிறது என்று உங்களுக்கு அப்போது புரியும். அப்படி என்ன இடம் அது என்று பார்க்க இந்த செய்தியை முழுமையாக பாருங்கள்.
வெயில் இன்னமும் சென்னையில் குறையவே இல்லை. காங்க்ரீட் காடுகளால் சூழப்பட்ட சென்னையில் கடற்கரை மட்டும்தான் ஒரே பெரிய சுற்றுலா தளமாக உள்ளது. அதுவும் வெயிலுக்கு போகவே முடியாது.. மாலைநேரத்திற்கு பிறகோ அல்லது இரவிலோ தான் செல்ல முடியும். அங்கு இருக்கும் மக்களின் எண்ணிக்கையை பார்த்தால், கடல் அலையும் கை கூப்பி வணங்கிவிட்டு போய்விடுங்கள் என்று சொல்லும். அந்த அளவிற்கு மக்கள் கூட்டம் இருக்கும்.

சென்னையில் மதிய வெயிலில் ஒரு 10 நிமிடம் பைக்கில் போய் வந்தாலே சென்னை மக்களுக்கு சொந்த ஊரின் அருமை புரிந்திருக்கும். அதற்காக மற்ற ஊர்களில் வெயில் குறைவாக உள்ளதாக சொல்ல முடியாது. ஆனால் சென்னைக்கு மற்ற ஊர்களுக்கு நிறையவே வித்தியாசம் உள்ளது.
சென்னையில் 10 நிமிடம் பைக் எடுத்து சென்றால் பக்கத்து தெருவையே தாண்ட முடியாது. ஆனால் சில ஊர்களில் இருந்து 10 நிமிடம் பைக்கில் சென்றால், உலகத்தின் மொத்த சொர்க்கமும் அங்குதான் இருக்கும். அப்படிப்பட்ட இடங்களில் வாழ்பவர்களின் வாழ்க்கை உண்மையில் வரம் தான்.
அடிக்கின்ற வெயிலுக்கு வார இறுதியில் எங்காவது குளுமையான இடத்திற்கு செல்லலாம் என்று பலருக்கும் யோசனை இருக்கும். ஆனால் போன இடத்திற்கோ போகக்கூடாது என்று ஆசைப்படுவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை ஒரு ரயில் பயணமும், அதன்பின்னர் போகப்போகும் இடமும் உங்களுக்கு நிச்சயம் அருமையாக இருக்கும். அதை பார்ப்போம். சென்னையில் இருந்து தேனி மாவட்டம் போடிக்கு ரயில் இன்று முதல் ஆரம்பம் ஆகி உள்ளது. வாரத்தில் மூன்று நாள் சென்னையில் இருந்து போடிக்கும், வாரத்தில் மூன்று நாள் போடியில் இருந்து சென்னைக்கும் ரயில் பயணம் தொடங்குகிறது.
வெறும் 390 ரூபாயில் தேனி மாவட்டம் போடிக்கு போய் இறங்கினால், அங்கிருந்து வெறும் 10 நிமிடத்தில் அற்புதமான இடமான குரங்கனி இருக்கிறது. போடி நகரம் மலையின் அடிவாரம் ஆகும். அங்கு இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அருவி இருக்கிறது. போகும் வழியிலேயே கொட்டக்குடி கிராமம் இருக்கும். அந்த கிராமத்தில் தான் கும்கி படம் எடுத்தார்கள். சரியாக மலையும் சமவெளியும் ஒன்று சேரும் இடம் ஆகும். அற்புதமாக இருக்கும். அங்கு போய் பார்த்தால் பசுமை போர்த்திய மேற்கு தொடர்ச்சி மலையின் அழகையும் சமவெளிகளையும் ஒன்றாக ரசிக்கலாம்.

அப்படியே திரும்பவும் அங்கிருந்து கிளம்பினால் குரங்கனி வந்துவிடும். அருவிகளின் பிறப்பிடம். வாழ்வில் ஒருமுறையாவது அங்கு சென்று பாருங்கள். எவ்வளவு வெயில் அடித்தாலும் அங்கு தெரியாது. சுற்றிலும் மலைகள் சூழப்பட்டிருக்கும் ஒரு பகுதி. அங்கு செல்போன் சிக்னல் எதுவும் வேலை செய்யாது. அங்கு அருவியில் உற்சாகமாக குளித்துவிட்டு அப்படியே .. டிரக்கிங் செல்ல அனுமதி பெற்று மேலே டாப் ஸ்டேசனை நோக்கி நடக்க தொடங்கினால், நீங்கள் இந்த வாழ்க்கையில் பார்க்க வேண்டிய சொர்க்கம் அங்கு இருக்கும். சென்ட்ரல் ஸ்டேசன் கிராமம் வரும் . அதன்பிறகு டாப் ஸ்டேசன் வரும்.
காலையில் நடக்க தொடங்கினால் மதியம் அங்கு சென்றுவிடலாம். ஆனால் நிச்சயம் வனத்துறை அனுமதி தேவை. வனத்துறை அனுமதி இல்லாமல் போக முடியாது. வனத்துறை டிரக்கிங் செல்ல அனுமதி தருகிறது. வனத்துறை குழுவினருடன் பாதுகாப்பாக செல்லுங்கள். டிரக்கிங் முடிந்து டாப் ஸ்டேசனை அடைந்தால் அங்கிருந்து மூணாறு மிகவும் பக்கம். அந்த பக்கம் மாட்டுப்பட்டி அணை உள்பட புகழ் பெற்ற சுற்றுலா இடங்கள் அத்தனைக்கும் செல்ல முடியும்.
இதே போல் டாப் ஸ்டேசனில் இருந்து நேராக வட்டக்கானல் சென்றால், அங்கு கொடைக்கானால் செல்லும் பாதையில் ஜீப்பில் அழைத்து செல்வார்கள். அதுவும் மிகவும் சூப்பராக இருக்கும். வார்த்தைகளால் அந்த பயணத்தை சொல்ல முடியாது. போய் பார்த்துவிட்டு சொல்லுங்கள். உங்களுக்கு நான் சொல்வது நிச்சயம் புரியும்.












Click it and Unblock the Notifications