வந்தாச்சி பொங்கல் கரும்பு.. ரூ.5,000 கேட்டு ஜன 2ல் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துமா?ஈபிஎஸ் முடிவு என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் தொகுப்பில் கரும்பு இல்லாததை கண்டித்தும், விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க கோரியும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும் திமுக அரசை கண்டித்து திருவண்ணாமலையில் ஜனவரி 2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலையில் அறிவித்தார்.

இந்நிலையில் தான் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்குவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி ரூ.5 ஆயிரம் வழங்க கோரி அதிமுக சார்பில் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழர் திருநாளான பொங்கலுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் ரேஷன் கடைகள் வாயிலாக பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வந்தது.

அதிமுக ஆட்சியில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.

 பச்சரி, சர்க்கரையடன் ரூ.1000

பச்சரி, சர்க்கரையடன் ரூ.1000

கடந்த ஆண்டு திமுக அரசு சார்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்பட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தான் இந்த ஆண்டு திமுக அரசு பொங்கல் தொகுப்புக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரும்பு இல்லை

கரும்பு இல்லை

இதற்கான டோக்கன் விரைவில் வழங்கப்பட உள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து ரூ.1,000 பணத்துடன் பச்சரி, சர்க்கரை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் பொங்கலுக்கு அரசு சார்பில் கரும்பு வழங்காததற்கு எதிர்ப்பு கிளம்பியது. விவசாயிகள், அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்னள. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியும் கரும்பு இல்லாததை கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

 ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

இந்நிலையில் தான் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் ஜனவரி 2ம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த வேளையில் விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கவும் வலியுறுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் அதிர்ச்சி

விவசாயிகள் அதிர்ச்சி

அதிமுக ஆட்சியில் ஆண்டுதோறும் தை பொங்கலை முன்னிட்டு ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையி்ல சர்க்கரை, அரிசி, செங்கரும்பு, ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுவது வழக்கம். விவசாய பெருங்குடி மக்கள் இந்த விடியா ஆட்சியில் பல்வேறு துன்பங்களையும், துயஙர்களையும் சந்தித்து வரும் இவ்வேளையில் 2023ம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட இருக்கும் பரிசு தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் மக்களை ஏமாற்றியதோடு, அசரின் சார்பில் செங்கரும்பை கொள்முதல் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் செங்கரும்பை விளைவித்துள்ள நிலையி்ல, தற்போதைய அரசின் அறிவிப்பால் விவசாய பெருங்குடி மக்கள் மிகுந்த அதிர்ச்சியம், வேதனையும் அடைந்துள்ளனர்.

பொறுப்பற்ற முறையில் அமைச்சர்

பொறுப்பற்ற முறையில் அமைச்சர்

பொதுமக்களும், விவசாய பெருமக்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ள இச்சூழ்நிலையில் அரசின் சார்பில் வழங்க இருக்கும் பொங்கல் தொகுப்பு குறித்து விடியா திமுக அரசின் அமைச்சர் எவ வேலு செய்தியாளர்களிடம் பேசியபோது வெல்லம், கரும்பு, முந்திரி போன்ற பொருட்களை வழங்கியபோது அதன் தரம் குறித்து புகார்கள் வந்ததால், இந்த ஆண்டு பொங்கல் தொகப்பில் இதுபோன்ற பொரட்கள் வழங்கப்படவில்லை என பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார். இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

ஜனவரி 2ல் விவசாய பிரிவு ஆர்பாட்டம்

ஜனவரி 2ல் விவசாய பிரிவு ஆர்பாட்டம்

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் மக்களை ஏமாற்றியதோடு, செங்கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாதரத்தை சிதைத்துள்ள விடியா திமுக அரசை கண்டித்தும், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கேட்டு கொண்டபடி, தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும், விவசாயிகளிடம் இருந்து செங்கரும்பை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வலியுறுத்தியும் அதிமுக விவசாய பிரிவின் சார்பில் 2023 ஜனவரி 2ம் தேதி காலை 10 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு கழக துணை பொதுச்செயலாள கேபி முனுசாமி, கழக அமைப்பு செயலாளர் பி தங்கமணி தலைமை வகிப்பார்கள்'' என தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் நடக்குமா? இல்லையா?

ஆர்ப்பாட்டம் நடக்குமா? இல்லையா?

இதற்கிடையே அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் தமிழக அரசிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியானது. அதன்படி பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையடன் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி பொங்கல் கரும்பு சார்ந்த விஷயங்களை கைவிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க கோரி அதிமுக சார்பில் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் கூட ரூ.5 ஆயிரத்தை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க கோரி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் கூட இதுபற்றிய மறுஅறிவிப்பு எதுவும் தற்போது வரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+