சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

6 மாதத்தில் கட்சி ஆரம்பிப்பாராம் ரஜினி.. சொல்கிறார் கராத்தே.. அப்ப பொங்கலுக்கு இல்லையா!

ரஜினி புது கட்சி பற்றி தெரிவித்துள்ளார் கராத்தே தியாகராஜன்

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினி வருகிறார்..இனி சீமானுக்கு நிறைய வேலைகள் இருக்கும்! | Rajini Political Entry

    சென்னை: அப்படின்னா, வரும் பொங்கலுக்கு கூட ரஜினி கட்சியை ஆரம்பிக்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ரஜினி இன்னும் 6 மாசத்துல கட்சி ஆரம்பிப்பார் என்று கராத்தே தியாகராஜன் ஆரூடம் சொல்லி உள்ளார்.

    ரஜினியை அடிக்கடி சந்தித்து பேசும் நபர்களில் ஒருவர் கராத்தே தியாகராஜன். அடிக்கடி இவர் போயஸ் வீட்டுக்குள் நுழைந்து பேசிவிட்டு வெளியே வரும்போதெல்லாம், "என்ன திடீர்ன்னு இங்க வந்திருக்கீங்க, என்ன விஷயம்" என்று செய்தியாளர்கள் கேட்பார்கள்.

    அதற்கு, "திடீர் சந்திப்பு எல்லாம் இல்லை. ரஜினி எனக்கு ஒரு நல்ல சகோதரர். அடிக்கடி அவரை சந்திப்பது என் வழக்கம். அரசியல் தொடர்பாக பேசுவோம்" என்று தவறாமல் சொல்வார்.

    கீழடி அகழாய்வு நிலத்தை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின்!கீழடி அகழாய்வு நிலத்தை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின்!

    முதல்வர்

    முதல்வர்

    அத்துடன், "சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் ரஜினிகாந்த் கட்சி தொடங்கிவிடுவார். ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் சக்திவாய்ந்த தலைவராகதான் வருவார். முதல்வராவார்" என்பதையும் மறக்காமல் சொல்லிவிட்டு, "அடிக்கடி அவரை சந்திப்பதினால் கட்சியில் சேருவதாக அர்த்தமா?" என்றும் கேள்வி எழுப்புவார்.

    கேஎன் நேரு

    கேஎன் நேரு

    இப்படி அடிக்கடி ரஜினியை இவர் சந்தித்து பேசும்போதெல்லாம் கட்சிக்குள் சலசலப்பு எழுந்து அடங்கும். ஒரு கட்டத்தில், திமுக மூத்த தலைவர் கேஎன் நேருவுடன் ஏற்பட்ட கருத்து மோதலை தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கே விரிசல் ஏற்படும் நிலைமை உருவானதால், கராத்தே தியாகராஜன் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்துதான், ரஜினி குறித்த பேச்சு இவரிடம் நிறைய தென்பட தொடங்கியது.

    தியாகராஜன்

    தியாகராஜன்

    2 நாளைக்கு முன்பு ரஜினி வரும் பொங்கலுக்குள் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக செய்திகள் வந்தன. அதனை நம்பும்வகையில், ரஜினி அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரையும் சந்தித்து பேசிவிட்டு வந்தார். இதனால் ரசிகர்களும் தெம்பாகி விட்டனர். இந்த நிலையில், ரஜினி கட்சி தொடங்குவதை வழக்கம்போல் கராத்தே தியாகராஜன் ஊர்ஜிதப்படுத்தி உள்ளார்.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    ஆனால் இவர் 6 மாதத்துக்குள் அதாவது வரும் மார்ச் மாதத்துக்குள் ரஜினி கட்சி தொடங்குவார் என்று தெரிவித்துள்ளர். அதனால் பொங்கலுக்குள் அறிவிப்பு என்பது கால தாமதமாகுமா என்று தெரியவில்லை. இன்று செய்தியாளர்களிடம் கராத்தே தியாகராஜன் பேசும்போது, "இன்னும் 6 மாதத்தில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார். வரும் 2021ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்தின் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றும். ரஜினிகாந்த் தமிழகத்தின் முதல்வர் ஆவார்" என்றார்.

    பிரகாச வாய்ப்பு?

    பிரகாச வாய்ப்பு?

    ரஜினி கட்சி ஆரம்பித்தால், எப்படியும் கராத்தே தியாகராஜன் அதில் இணைந்துவிடுவார் என்ற பேச்சு ஏற்கனவே பலமாக எழுந்த ஒன்றுதான். இப்போது காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் கண்டிப்பாக அங்கு திரும்ப போக முடியாது. ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை பற்றி கேள்விகேட்டு கடுப்பேற்றியதால் அங்கேயும் போக முடியாது. அதனால் ரஜினி தொடங்கும் புதுகட்சியின் ஆன்மீக அரசியலில் தன்னை எப்படியும் இணைத்து கொள்வார் என்றும், வாய்ப்பு பிரகாசம்தான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எல்லாம் சரிதான்.. ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிக்கணுமே?!

    English summary
    In Chennai Karate Thiyagarajan says that Actor Rajinikanth will start political party in 6 months
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X