Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இறையன்பு ஐஏஎஸ் எடுத்த சூப்பர் முடிவு.. அந்த மனசு தான் கடவுள்.. டிரைவர்களுக்கு மேஜர் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்த மனசு தான் சார் கடவுள்.. இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் எடுத்துள்ள ஒரு முடிவு உண்மையில் டிரைவர்களுக்கு வரம் ஆகும். சென்னை போன்ற பெரிய நகரங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் உள்ள ஓட்டல்கள், விடுதிகளில் ஓட்டுநர்கள் தங்குவதற்கு ஓய்வுக் கூடங்கள் அமைக்குமாறு தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ் அறிவுறுத்தி உள்ளார்.

ஓட்டுநர் என்பவர் பல உயிரை காப்பவர். தன்னை நம்பி பயணிப்போரை ஆபத்து இன்றி விரைவாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பார்கள்.

Tamil Nadu chief secretary iraianbu ias order To set up rest houses in tourist spots for divers

சுற்றுலா செல்வோருக்கு ஓட்டுநரின் பணி எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். பல சுற்றுலாவில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், தூங்காமல் கண் விழித்து, தங்குவதற்கு கூட சரியான இடம் இல்லாமல் தவிப்புடன் பணியாற்றி மக்களை சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்று மகிழ்விப்பார்கள். ஆனால் அப்படி சுற்றுலா செல்லும் போது பொதுவாக டிரைவர்களுக்கு ஓய்வு கிடைப்பது இல்லை. தங்குவதற்கு இடமும் தருவது இல்லை. வாகனங்களில் குறைவான நேரமே தூங்க முடியும். ஒரு சிலரே டிரைவர்களுக்கும் அறைகளை ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். மற்றவர்கள் டிரைவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள்.

இந்த விஷயத்தை கவனித்த தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், பெரிய நகரங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் உள்ள ஓட்டல்கள், விடுதிகளில் ஓட்டுநர்கள் தங்குவதற்கு ஓய்வுக் கூடங்கள் அமைக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து வீட்டுவசதி துறை செயலர் அபூர்வாவுக்கு தலைமைச் செயலர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் தங்கும் விடுதிகள், ஓட்டல் தொழில்கள் நன்கு வளர்ச்சி அடைந்து வருகின்றன.

பொதுமக்கள் பணிச்சூழலால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் விதமாக, விடுமுறை நாட்களில் சுற்றுலா இடங்களுக்கு அதிகம் செல்கின்றனர். பெரும்பாலும், இதுபோன்ற பயணம் தற்செயலானது என்பதால், பலரும் ஓட்டுநர்களை மட்டும் பணியமர்த்திக் கொண்டு, தங்களது கார் போன்ற சொந்த வாகனங்களில் செல்கிறார்கள்.

ஓட்டுநர்களை கண்டுகொள்வது இல்லை: ஓட்டல்கள், விடுதிகளில் சொகுசு அறைகளை எடுத்து தங்கும் அவர்கள், உடன் வந்த ஓட்டுநர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். அந்த ஓட்டுநர்கள் வேறு வழியின்றி, அந்த விடுதியின் வராண்டா பகுதி அல்லது வந்த காரிலேயே மிகுந்த சிரமத்துடன் இரவு தங்குகின்றனர். அசவுகரியம் காரணமாக அவர்களால் இரவு சரியாக தூங்க முடிவது இல்லை. அதே களைப்புடன் மறுநாள் வாகனம் ஓட்டும் நிலையில், அந்த அசவுகரியமே விபத்துக்கு காரணமாகிறது.

கட்டணம் வசூலிக்கலாம்: எனவே, விடுதிகள், ஓட்டல்கள், லாட்ஜ்களில் வாகன ஓட்டுநர்கள் தங்குவதற்கு கட்டாயம் ஓய்வுக் கூடங்களை அமைக்க வேண்டும். இதற்காக சாதாரணமான தொகையை வசூலிக்கலாம். வாகன நிறுத்த கட்டணத்தில் கூட அதை இணைத்து பெறலாம்.

திட்ட அனுமதி: எனவே, பெருநகரங்கள், சுற்றுலா பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளின் கட்டுமானத்துக்கு திட்ட அனுமதி கோரும்போது, ஓட்டுநர் தங்கும் விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு இதுபோல மனிதாபிமானத்துடன் உதவும்போது, விபத்துகளை தவிர்க்கலாம். சாலை பாதுகாப்பு, ஓட்டுநர்கள் நலனில் உங்களது இந்த நடவடிக்கை வரவேற்பை பெறும்" இவ்வாறு தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+