கோவை ஐடி ஊழியர்.. பவானிசாகரில் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்
ஈரோடு: கோவை மாவட்டம் சிவானந்தபுரம் வேல்முருகன் நகரை சேர்ந்தவர் ராம்குமார் என்ற தனியார் நிறுவன ஐ.டி. ஊழியர், கடந்த செப்டம்பர் 20ம் தேதி அன்று தன் நண்பர்கள் 2 பேருடன் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதிக்கு காரில் வந்தார். தொப்பம்பாளையம் வழியாக சென்றபோது காரை நிறுத்திவிட்டு அங்குள்ள கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி அனைவரும் குளித்துள்ளதால், அப்போது தான் யாருமே எதிர்பார்க்காத அந்த சம்பவம் நடந்துள்ளது.
கோவையை பொறுத்தவரை தற்போது ஏராளமான ஐடி நிறுவனங்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளை ஒப்பிடும் போது, படிப்படியாக ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஐடி ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் கோவையில் வேலை செய்கிறார்கள்.

கோவை ஐடி ஊழியர்கள்
கோவையில் வேலை செய்யும் ஐடி ஊழியர்கள், வார இறுதியை கொண்டாட, ஊட்டி, கோவை குற்றலாம், வால்பாறை, குன்னூர், கோத்தகிரி, கொடநாடு, பவானி சாகர் அணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வது அதிகமாக உள்ளது. குறிப்பாக நண்பர்களுடன் வார இறுதியில் ஜாலியாக சுற்றுலா செல்வது அதிகமாக இருக்கும். அப்படித்தான் காரில் நண்பர்களுடன் டிரிப் சென்றவருக்கு என்ன நடந்தது தெரியுமா? இதை பாருங்கள்.
கோவை ஐடி ஊழியர்
கோவை மாவட்டம் சிவானந்தபுரம் வேல்முருகன் நகரை சேர்ந்த 33 வயதாகும் ராம்குமார் என்பவர் தனியார் நிறுவன ஐ.டி. ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் தன் நண்பர்கள் 2 பேருடன் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதிக்கு காரில் வந்துள்ளார். தொப்பம்பாளையம் வழியாக சென்றபோது காரை நிறுத்திவிட்டு அங்குள்ள கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி அனைவரும் குளித்திருக்கிறார்கள்.
நீச்சல் தெரியாது
இதில் நீச்சல் தெரியாமல் ராம்குமார் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் அங்கு சென்று தேடிப்பார்த்தனர். ஆனால் ராம்குமார் கிடைக்கவில்லை. இரவானதால் தேடும் பணியை நிறுத்தினர்.
2வது நாளாக சோதனை
இந்த நிலையில் நேற்று காலை 2-வது நாளாக மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது ராம்குமாரின் உடல் சத்தியமங்கலம் உக்கரம் பகுதி குப்பன் துறை அருகே கரை ஒதுங்கி கிடந்ததை பார்த்தார்கள். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராம்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு மாவட்டம் பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுகளில் குளிக்க வேண்டாம்
தற்போது பல்வேறு ஆறுகள் மற்றும் அருவிகளில் தண்ணீர் அதிகமாக ஓடுகிறது. வரும் 4 முதல் ஐந்து மாதங்கள் வரையிலும் ஆறுகளில் தண்ணீர் அதிகமாக இருக்கும். எனவே சுற்றுலாவாக செல்வோர் அல்லது குளிக்க செல்வோர் கவனமாக இருக்க வேண்டும். வெள்ளம் பாயும் ஆறுகளில் இறங்கி குளிப்பது மிகவும் ஆபத்தில் முடியலாம். நீச்சல் தெரியாதவர்கள் ஆழம் தெரியாமல் சென்றால், உற்சாக பயணம் அதுவே இறுதி பயணமாகும் அபாயம் உள்ளது. எனவே கவனமாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications