Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“இருக்கலாம்.. ஆனா இல்ல”.. அதிமுக பற்றி பூசி மெழுகும் அண்ணாமலை.. ஆவேசம் எங்க போச்சு? பின்னணி இதானா?

Subscribe to Oneindia Tamil

கோவை: கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் நடந்த பிரஸ் மீட்டில் அதிமுக தலைவர்களை காட்டமாக விமர்சித்துப் பேசிய அண்ணாமலை, இன்று பூசி மெழுகியுள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என ஜெயக்குமார் அதிரடியாக அறிவித்த நிலையில், அண்ணாமலையின் பேச்சில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கொந்தளிக்க வைத்தது. ஏற்கனவே ஜெயலலிதா பற்றிப் பேசியபோது பாஜக- அதிமுக இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்நிலையில், அண்ணாவை அண்ணாமலை விமர்சித்துப் பேசியுள்ளதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக எதிர்வினை ஆற்றினர். குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அண்ணாமலை திமுகவுடன் சேர்ந்து திட்டம் தீட்டுகிறாரோ என சந்தேகம் கிளப்பியிருந்தார்.

Big change in Annamalais speech after ADMK BJP alliance clash erupts

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கடுமையான விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, "நல்ல போலீஸை பார்த்தால் திருடனுக்கு பயம் வரத்தான் செய்யும். தேள் கொட்டியதுபோல தான் இருக்கும். என்னுடைய தரத்தை தாழ்த்தி நான் எப்போம் அவதூறான வார்த்தைகளை முன்வைக்க மாட்டேன். இதற்கு முன்பு யாரெல்லாம் தமிழகத்தில் அமைச்சர்களாக இருந்து வசூல் செய்துள்ளார்களோ, அவர்கள் அனைத்தையும் வசூலாகத்தான் பார்க்கிறார்கள்.

வசூல் செய்து யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ, அவர்களுக்கெல்லாம் நேர்மை என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது. நேர்மை அரசியல் செய்பவர்களுக்குத்தான் நான் செய்யும் நேர்மை அரசியல் தெரியும். என்னிடம் மிரட்டல் உருட்டல் எல்லாம் வேலைக்கு ஆகாது. எனக்கும் கடும் சொற்கள் பேச வரும். நேர்மையை பற்றி சி.வி.சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது.

சி.வி.சண்முகம் 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு பின்பு ஒரு மாதிரி பேசுவார். காவல்துறையில் 10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை இது. அவர் மந்திரியாக இருக்கும்போது என்னென்னவெல்லாம் செய்தார் என்பது எனக்கு தெரியும். என்னை செருப்பால் அடித்தால் கூட பொறுத்துக்கொள்வேன். ஆனால், என்னுடைய நேர்மையை கொச்சைப்படுத்தினால் யாராக இருந்தாலும் நான் விடமாட்டேன். கூட்டணிக்காக அடிமையாக இருக்க முடியாது." என ஆவேசமாகப் பேசினார் அண்ணாமலை.

இதற்கு அடுத்த நாளே அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்து அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அறிவிப்பை வெளியிட்டார். மேலும், இனி அண்ணாமலை எங்களை விமர்சித்தால், நாங்களும் தாறுமாறாக பதிலடி கொடுப்போம் என்றார். அதிமுக - பாஜக கூட்டணி இல்லை, இது கட்சியின் முடிவு என ஜெயக்குமார் தெரிவித்தது அரசியல் அரங்கில் பரபரப்பைப் பற்ற வைத்தது.

இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முந்தைய பேச்சைப் போல ஆவேசமாக இல்லாமல், பூசி மெழுகும் வகையில் பேசியுள்ளார். அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே பிரச்சனை இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம் எனக் கூறியுள்ளார் அண்ணாமலை.

அதிமுகவுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்சனை இல்லை. அதிமுகவுக்கும் தமிழ்நாடு பாஜகவுக்கும் பிரச்சனை இருக்கிறதா என்றால் இல்லை. 4 நாட்களாக அதிமுக தலைவர்கள் பலர் பேசியுள்ளார்கள். அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்சனை இருக்கிறதா? இருக்கலாம்.. ஆனால், அதுவும் எனக்கு தெரியாது. எனக்கு யாரிடமும் பிரச்சனை இல்லை. அவர்கள் பேச்சை வைத்து சொல்கிறேன்.

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்பவர்கள் நமது என்.டி.ஏ கூட்டணியில் இருக்கிறார்கள். நான் இதில் எந்தப் பிரச்சனையையும் பார்க்கவில்லை." எனப் பேசியுள்ளார் அண்ணாமலை. கூட்டணிக்காக கும்பிடு போடமுடியாது என 4 நாட்களுக்கு முன்னர் பேசிய அண்ணாமலை, இப்போது அதிமுகவில் சிலருக்கும் தனக்கும் இடையே பிரச்சனை இருக்கலாம், அதுவும் தெரியவில்லை என பூசி மெழுகும் வகையில் பேசியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பது பாஜக தேசிய தலைமையின் உறுதியான முடிவு என்றும், அண்ணாமலையின் சமீபத்திய பேச்சால் தலைமை அதிருப்தி அடைந்து, அண்ணாமலையிடம் ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்டிருப்பதாகவும், அதையடுத்தே இன்று அண்ணாமலை, அதிமுகவை அதிகம் தாக்காமல், சமரசமாகச் செல்லும் வகையில் பேசியுள்ளார் என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+