For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை-தமிழகத்தின் டெட்ராய்ட்

By Staff
Google Oneindia Tamil News

Coimbatore map
கொங்கு மண்டலம், கோவை, கோனியம்மன்புத்தூர் என்று பல பெயர்களில்அழைக்கப்படுவது தமிழகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரியநகரமான கோயம்புத்தூர்.

தமிழகத்தின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் அளவுக்கு ஆட்டோமொபைல் மற்றும்மோட்டார் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் கோவை, தமிழகத்தின் தொழில் நகரம்.

மாவட்டம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் விரவிக் கிடக்கின்றன. ஜவுளித்தொழில், பொறியியல் தொழில், ஆட்டோமொபைல் உதிரி பாக தயாரிப்புநிறுவனங்கள் என பல வகையான தொழில்கள் இங்கு ஆட்சி புரிகின்றன.

இதமான தட்பவெப்பம், விருந்தோம்பலில் வெளுத்துக் கட்டும் இனிய மக்கள் எனஏகப்பட்ட பிளஸ் பாயிண்டுகளுடன் உள்ள கோவை, இப்போது தகவல்தொழில்நுட்பப் புரட்சிக்கு பச்சைக் கம்பளம் விரித்து விண்ணதிர வளரகாத்திருக்கிறது.

வரலாறு:

நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் அழகிய நகரம் கோவை. மதுரைக்குஎப்படி மீனாட்சியோ அதுபோல, கோவைக்கு கோணியம்மமன். அதனால்தான்கோணியம்மன் ஆட்சி புரியும் நகரம் என்பதால் கோவை மாநகருக்குகோணியம்மன்புத்தூர் என்றும் ஒரு பெயர் உண்டு.

சேர மன்னர்களின் ஆட்சிக் கட்டிலாக இருந்த பெருமை கோவைக்கு உண்டு. பின்னர்சோழர்களின் ஆட்சிக்கு இந்த கொங்கு மண்டலம் சில காலம் கை மாறியது. கரிகால்சோழன் காலத்தில்தான் பேரூர் கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

பின்னர் ராஷ்டிரகூடர்கள் கைக்கும் கொங்கு பூமி மாறியது. மைசூரை ஆண்ட கங்கமன்னர்கள் கையிலும் சில காலம் கோவை தவழ்ந்தது. அதன் பின்னர்சாளுக்கியர்களும், தொடர்ந்து பல்லவர்களும் கோவை மண்டலத்தை ஆட்சிபுரிந்துள்ளனர். சில காலம் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் கைக்கும் கோவைஇடம் மாறியிருந்தது.

9வது நூற்றாண்டில் மீண்டும் சோழர் கைக்கு கோவை மாறியபோதுதான் கோவைமாநகரத்தை அழகான, திட்டமிட்ட ஒரு நகரமாக மாற்றினார்கள். நகரின் மையத்தில்கோணியம்மனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அதைச் சுற்றிலும் நகரம்உருவாக்கப்பட்டது.

அந்த ஊருக்கு கோவன்புதூர் என்று பெயரும் சூட்டப்பட்டது. இருளர் சமுதாயத்தைச்சேர்ந்த தலைவனின் பெயர் தான் கோவன். அவரது பெயராலேயே அந்த ஊர்நிர்மாணிக்கப்பட்டது. இதுதான் பின்னர் கோயம்புத்தூர் என்று உருமாறியது.

கோவையை வளர்த்த பெருமை இருளர் சமுதாயத்திற்கு உண்டு. ஊரைச் சுற்றிலும்அவர்கள் ஏராளமான குளங்களையும், ஏரிகளையும் வெட்டினர். இன்றளவும் அந்தகுளங்கள் கோவை மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பது வரலாற்றையும் மீறியசாதனைப் பதிவு.

சோழர்களிடமிருந்து பாண்டியர்கள் கைக்கு மாறிய கோவை, பின்னர் 1291வதுஆண்டில், கர்நாடகத்தின் சாளுக்கிய மன்னர்கள் கைக்கு மாறியது. அதன் பின்னர்14வது நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட முகம்மதியர்கள் கோவையைக்கைப்பற்றினர். மதுரையை ஆண்டு வந்த முஸ்லீம் மன்னர்தான் கோவையையும் ஆட்சிபுரிந்தார்.

14ம் நூற்றாண்டின் இறுதியில் முஸ்லீம் மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் விஜய நகர சாம்ராஜ்யத்தின் கீழ் கோவை வந்தது. விஜய நகர சாம்ராஜ்யம்வீழ்ந்த பின்னர் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட நாயக்க மன்னர்கள் வசம்கோவை வந்தது.

தங்களது கீழ் வந்த பகுதிகளான கோவை, வேலூர், தஞ்சாவூர், சந்திரகிரி, மைசூர்ஆகிய பகுதிகளுக்கு ராணுவ ஆட்சியாளர்களை நாயக்கர்கள் நியமித்தார்கள்.இவர்களுக்கு பாளையக்காரர்கள் என்று பெயர்.

இந்தக் காலகட்டத்தில் கோவை நகரமாக இருக்கவில்லை. 3000 பேர் மட்டுமேவசித்து சிறிய கிராமமமாகத்தான் இருந்தது.

1760களில் மைசூர் ஆட்சியை ஹைதர் அலி கைப்பற்றினார். அவரது நிர்வாகத்தின்கீழ் கோவை பிராந்தியமும் வந்தது. ஹைதர் அலி இங்கிலாந்து ஆட்சியாளர்களைஎதிர்த்து கடுமையாக போராடினார்.

மைசூர் சமஸ்தானத்திற்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே கடும் போர் நடந்தது.திப்பு சுல்தானின் மரணத்தோடு இந்தப் போர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர்கோவையை சென்னை மாகாணத்தோடு ஆங்கிலேயர்கள் இணைத்தனர்.

1804ம் ஆண்டு கோவையை தலைநகரமாகக் கொண்டு புதிய கோவை மாவட்டத்தைஆங்கிலேயர்கள் அமைத்தனர். 1848ம் ஆண்டு கோவை நகருக்கு நகராட்சிஅங்கீகாரம் கொடுக்கப்பட்டது.

முதல் நகராட்சித் தலைவராக சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் பதவியேற்றார். இப்படியாகநகரமாக உருவெடுத்த கோவை, மாநகரமாக அதாவது மாநகராட்சியாக 1979ம்ஆண்டு அந்தஸ்து உயரப் பெற்றது. அருகாமையில் இருந்த சிங்காநல்லூர் நகராட்சிஅப்போது கோவை நகராட்சியுடன் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக மாற்றப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X