Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்காசிக்கு டிக்கெட் போடுங்க.. குற்றாலம் போனவர்கள் குஷி.. அருவி மட்டுமல்ல.. அடியோடு மாறிய வானிலை!

Subscribe to Oneindia Tamil

குற்றாலம் : குற்றாலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கிளைமேட் வேறலெவலில் இருக்கிறது. சாரல் மழையுடன் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. தென்காசி, செங்கோட்டையில் பிறந்தவர்கள் சொர்க்கத்தில் பிறந்தவர்கள் என்று சொன்னால் அது மிகையே இல்லை. மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் இப்போது போய் பாருங்கள். ஏன் சொல்கிறேன் என்பது உங்களுக்கே புரியும்.

திருநெல்வேலி மாவட்டம் அல்வாவிற்கு புகழ் பெற்றது. இன்னொரு விஷயம் என்னவென்று கேட்டால் குற்றாலத்தை சொல்லலாம். திருநெல்வேலியில் இருந்து பிரிந்த தென்காசி மாவட்டத்திற்குள் குற்றலாம் வந்துவிட்டதால், தென்காசி மாவட்டத்தின் அடையாளமாக திகழ்கிறது.

fantastic climate in Courtalam, see at main Aruvi, Old Courtallam, aintharuvi this weekend

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள குற்றால அருவிகளில் மழை பெய்தால் தண்ணீர் அருவிகளில் ஆர்பரித்து கொட்டும். மற்ற அருவிகளுக்கும் குற்றாலம் அருவிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் கிளைமேட் தான். மலையில், மழையில், அருவியில் நனைத்திடலாம். அத்துடன் இதமான காலநிலையும் நிலவும். குளிரும், மெல்லிய வெயிலும், இதமான மழையும் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்திடும். அத்துடன் குற்றால அருவிகளில் குளிப்பது உங்களுக்கு நிஜமாகவே அருமையான அனுபவத்தை தரும்.

இந்த குற்றலா அருவிகளில் சீசன் என்பது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இருக்கும். இந்த ஆண்டு தாமதமாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக குற்றால சீசனும் தாமதமாகவே தொடங்கி உள்ளது. கிட்டத்திட்ட ஒரு மாதம் கழித்தே அதாவது ஜுலை மாதம் பிறந்த பின்னரே சீசன் தொடங்கியது. தற்போது குற்றாலத்தில் சீசன் களைகட்டி உள்ளது.

குற்றாலத்தின் முக்கிய அருவிகளான மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் கனமழை காரணமாக அண்மையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை குறைவால் தண்ணீர் படிப்படியாக குறைந்தது.

ஆனால் அண்மையில் பெய்த மழையால் ஓரளவு தண்ணீர் அருவிகளில் விழுந்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு முழுமையான சீசன் இல்லை என்ற போதிலும் தண்ணீர் ஓரளவு வந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த சூழலில் நேற்று காலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதன் காரணமாக அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. செவ்வாய்கிழமை இரவு முதல் இன்று காலை வரை காற்றுடன் கூடிய சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

fantastic climate in Courtalam, see at main Aruvi, Old Courtallam, aintharuvi this weekend

இதனால் ஐந்தருவி, மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கிளைமேட் வேறவெலலில் இருப்பதால் இன்று குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் கடைகளில் பழங்கள் விற்பனையும் களைகட்டி உள்ளது.மக்கள் ஆர்வமுடன் அங்கு விற்பனையான ரம்புட்டான், மங்குஸ்தான், மலைசீதா, கிர்ணி, அன்னாசி பழம், பலாப்பழம், ஸ்டார்ஸ் ப்ரூட்ஸ் பேரிக்காய் உள்ளிட்டவற்றை வாங்கி ருசித்து மகிழ்ந்தனர்

தென்காசி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து சாரல் மழை பெய்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கும் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த வார இறுதியில் குற்றலாத்திற்கு செல்வோர் இப்போதே பேருந்துகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.வார இறுதியை அற்புதமாக அனுபவிக்கலாம். தென்காசி போனால் அப்படியே பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோவில், கேரளாவில் உள்ள தனியார் அருவி மற்றும் பாபாநாசத்தை ஒட்டியுள்ள பல்வேறு சுற்றுலாதளங்களையும் இப்போது ரசிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+