ஊட்டி போகும் சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.. பொங்கல் பண்டிகை முடிந்து காத்திருக்கும் சர்ப்ரைஸ்
ஊட்டி: பொங்கல் பண்டிகையை ஒட்டிய ஊட்டிக்கு சுற்றுலா போகும் சுற்றுலா பயணிகளுக்கு நல்ல செய்தியை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் ஜனவரி வரும் 18 மற்றும் 21ம் தேதிகளில் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. அது எப்படி என்பதை பார்ப்போம்.
ஊட்டிக்கு சுற்றுலா போகும் ஒவ்வொருவருக்குமே அந்த மேற்கு தொடர்ச்சி மலையில் பயணிக்கும் மலை ரயிலில் ஒருமுறையாவது போய்விட வேண்டும் என்று ஆசை இருக்கும். அந்த ஆசை அவ்வளவு எளிதாக நிறைவேறுவது இல்லை.. காரணம் மலை ரயிலில் டிக்கெட் முன்பதிவு 3 மாதங்களுக்கு முன்பே மேற்கொள்ள வேண்டும். ஆசைப்பட்டு போக நினைத்தாலும் உடனே டிக்கெட் கிடைக்காது.

தற்போதைய நிலையில், ஊட்டி மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10க்கு கிளம்பி, காலை 11.55 மணிக்கு ஊட்டி செல்லும். முன்னதாக குன்னூருக்கு இந்த ரயில் 10.30க்கும், அரவங்காட்டிற்கு 10.59க்கும், கேத்திக்கு 11.19க்கும், லவ்டேலுக்கு 1139க்கும் இறுதியாக ஊட்டிக்கு 11.55 க்கும் போகும். அதேபோல் மறுமார்க்கமாக ஊட்டியில் இருந்து பிற்பகல் 2.25க்கு புறப்படும் நீலகிரி மலை ரயில், மாலை 5.35க்கு மேட்டுப்பாளையம் சென்றடையும் .
இந்த ரயிலில் டிக்கெட் கட்டணம் ஒருவருக்கு 300 ரூபாய் ஆகும். ஆன்லைனில் தான் புக்கிங் செய்ய முடியும். குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பே ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதேபோல் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை காலங்களில் புக்கிங் செய்வது பெரும் சவாலானது. அதேநேரம் முன்பதிவு இல்லாமல் ஆப்லைனில் அதாவது நேராக மேட்டுப்பாளையம் வந்தும் டிக்கெட் எடுத்து போகலாம், ஆனால் சில சீட்களே இருக்கும், இதில் மற்ற ரயில்களை போல் கூட்டமாக ஏற அனுமதி கிடையாது. ஒரு பயணி கூட கூடுதலாக ஏற முடியாது. ரயிலில் சீட்டு அளவில் தான் ஏற முடியும்.
எனவே உங்களுக்கு முன்பு ரயில் நிலையத்தில் டிக்கெட் கேட்டு காத்திருந்தவர்களுக்கு கிடைத்துவிட்டால், உங்களுக்கு கிடைக்காமல் போகும். இந்த சூழலில் பொங்கல் பண்டிகையை ஒட்டிய ஊட்டிக்கு சுற்றுலா போகும் சுற்றுலா பயணிகளுக்கு நல்ல செய்தியை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் ஜனவரி வரும் 18 மற்றும் 21ம் தேதிகளில் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
ரயில் நேரங்கள் எப்படி இருக்கும் என்பது விரைவில் தெரியவரும். ஊட்டி மலை ரயிலில் சென்றால் 200க்கும் மேற்பட்டபாலங்களை பார்க்கமுடியும். எல்லா ரயில் நிலையங்களிலும் இறங்கி சுற்றி பார்த்துவிட்டு ஏற முடியும். ஊட்டி மலை ரயில் மிகவும் அற்புதமான அனுபவமாக இருக்கும். ஊட்டி, குன்னூர் பகுதிகளை சுற்றி பார்க்க மலை ரயிலைவிட சிறந்த ஒன்று அங்கு இல்லவே இல்லை..












Click it and Unblock the Notifications