ரெடி ஆகுங்க மக்களே.. கொடைக்கானலில் 24 முதல் கோடை விழா! குளு குளு சீசனை அனுபவிக்க புதிய அருவி வருது
திண்டுக்கல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறியுள்ளார். குறிப்பாக கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியில் 'பெப்பர் அருவி' என்ற புதிய சுற்றுலாத்தலம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் ஆட்சியர் கூறியுள்ளார்
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடக போன்ற பல்வேறு வெளிமாநிலங்களிருந்து விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், வரக் கூடிய 24ஆம் தேதி முதல் 01.06.2025 தொடர்ந்து ஒன்பது நாட்கள் வரை பிரையன்ட் பூங்காவில் மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெற இருக்கிறது.

இதில் தினந்தோறும் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் , பரதநாட்டியம், மேஜிக் ஷோ, நாய்கள் கண்காட்சி சைக்கிள் போட்டி, படகு போட்டி, வாத்து பிடித்தல் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சரவணன்,முதல் முறையாக ரோஜா தோட்டத்தில் தினந்தோறும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
மலர்க் கண்காட்சியில் மயில், புவிசார் குறியீடு பெற்ற திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, கொய்யாகனி, செல்பிபாயின்ட், பூனை, பூமரம் போன்ற மலர்களால் ஆன உருவ அமைப்புகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய், கனிகளால் உருவாக்கப்படும் யானை, மர அணில், கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற ப்ளை கேட்சர், சிறுத்தை, பஞ்சவர்ண கிளி ஆகியவை மலர்க்கண்காட்சியில் வடிவமைக்கப்பட உள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
தற்பொழுது கொடைக்கானலில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக நகரின் முக்கிய பகுதியில் 360° செல்பி பாயிண்ட், ஏரி சாலைப் பகுதியில் இரவு நேரங்களில் லேசர் லைட் ஷோ மற்றும் வான் சாகச நிகழ்ச்சி ஆகியவை முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக 150க்கு மேற்பட்ட காவலர்கள் பணியில் அமர்த்த உள்ளதாகவும், 50க்கும் மேற்பட்ட இ டாய்லெட் அமைக்க உள்ளதாகவும், ஆங்காங்கே வாகன நிறுத்தம் செய்வதற்கு இடம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், நகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுற்றுலாப்பயணிகள் அவசர தொடர்புக்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படுத்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் துவங்கியிருந்தாலும் இ_பாஸ் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாக காணப்படுகிறது. மேலும் வார இறுதி நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்ட நிலையில் மற்ற இடைப்பட்ட நாட்களில் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் சுற்றுலா தொழிலை நம்பி தொழில் செய்து வருபவர்களும் தற்பொழுது மகிழ்ச்சியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications