கொடைக்கானல் அடிவாரம்.. ஒட்டன்சத்திரம் தலையூத்து அருவிக்கு நண்பர்கள் ஜாலி சுற்றுலா.. கடைசி வீடியோ
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மேல், கீழ் தலையூத்து அருவிகள் உள்ளன. பரப்பலாறு அணையில் இருந்து இந்த அருவிகளுக்குத் தண்ணீர் வருகிறது. இதில் தலையூத்து அருவியில் புதைக்குழி, சுழல் உள்ள பகுதியில் யாரும் குளிக்க அனுமதி இல்லை. அதேவேளையில் மேல் தலையூத்து அருவிக்குச் செல்ல முற்றிலுமாக பொதுமக்களுக்குத் தடை உள்ளது. ஆனால் இதை கேட்காமல் சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். அப்படித்தான் மகிழ்ச்சியுடன் அருவிக்குச் சென்ற 4 இளைஞர்களின் கடைசி வீடியோ வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மேல், கீழ் தலையூத்து அருவிகள் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த அபாயகரமான இடஙகள் ஆகும். தலையூத்து அருவிக்கு பரப்பலாறு அணையில் இருந்து இந்த அருவிகளுக்குத் தண்ணீர் வரத்து வருகிறது. தலையூத்து அருவி பகுதிக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள்.

இதில் கீழ் தலையூத்து அருவியில் புதைக்குழி, சுழல் உள்ள பகுதியில் யாரும் குளிக்க அனுமதி எப்போதுமே கிடையாது. அத்துடன் மேல் தலையூத்து அருவிக்குச் செல்ல முற்றிலுமாக பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வனத்துறையினரின் கண்காணிப்பு பலமாகவே இருக்கும். ஆனால் அதனையும் மீறி அத்துமீறி சிலர் அருவிக்குச் சென்று வருகிறார்கள். அவ்வாறு சென்றவர்களில் சிலர் ஆழம் தெரியாமல் அருவியின் தடாகத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அப்படித்தான் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டிப் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் 11 பேர் நேற்று விருப்பாட்சி தலையூத்து அருவியைப் பார்வையிட வந்தனர். அப்போது அவர்கள் தடை செய்யப்பட்ட மேல் தலையூத்து அருவிக்குச் சென்றனர். பின்பு வனத்துறையின் தடையை மீறி அங்குள்ள அருவி தடாகத்தில் குளித்ததாகத் தெரிகிறது.
அப்போது பள்ளப்பட்டியைச் சேர்ந்த அகமது சிராஜ் மகன் ஆடில் (வயது 19), நாசர்அலி மகன் சதாம் உசேன் (18), சேக் அலாவுதீன் மகன் ஆயாஸ் (19), உமர்பாருக் மகன் பயாஸ் (19) ஆகிய 4 பேர் திடீரென அருவி தடாக நீரில் மூழ்கி உள்ளார்கள். அதைக் கண்டதும் உடன் வந்த நண்பர்களை பார்த்து "காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்..." என கூச்சலிட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை..
பின்னர் மற்ற 7 வாலிபர்களும் செய்வதறியாது தவித்துள்ளனர். தொடர்ந்து விருப்பாட்சிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து ஒட்டன்சத்திரம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்புப் படையினர், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்புப் படையினர்கள் அருவியின் தடாகத்தில் பாதுகாப்பு உபகரணங்களுடன் இறங்கி, நீரில் மூழ்கி மாயமான 4 பேரையும் தீவிரமாகத் தேடினர். ஆனால் இரவு வரை அவர்கள் கிடைக்கவில்லை.
தொடர்ந்து இன்று காலை தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஒன்றிணைந்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினர். இதில் முதற்கட்டமாக மூன்று இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான மற்ற ஒருவரை தேடும் பணி தற்போதும் தொடர்ந்து வருகிறது.
ஒட்டன்சத்திரம் அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் பலி: 3 உடல்கள் மீட்பு
— velmurugan (@velmurugantheni) April 4, 2026
நேற்று காணாமல் போன 4 இளைஞர்களில் இன்று காலை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் உயிரிழப்பதற்கு முன் மகிழ்ச்சியுடன் அருவிக்குச் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. #kodikanal #dindigul #ottanchathiram pic.twitter.com/DZy7HIUbNN
இதனிடையே, உயிரிழந்த இளைஞர்கள் அருவிக்குச் செல்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு தங்களது செல்போனில் எடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நண்பர்கள் அனைவரும் சிரித்துப் பேசிக்கொண்டே, அதுதான் தங்களின் கடைசிப் பயணம் எனத் தெரியாமல் உற்சாகமாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications