Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடைக்கானல் டூர் போறீங்களா.. சூப்பர்.. ஆனால் தப்பி தவறி அந்த பக்கம் மட்டும் போயிடாதீங்க!

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு பல சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சுற்றுலா செல்கிறார்கள்.. சுற்றுலா செல்லும் பயணிகளே, கொடைக்கனாலில் சுற்றி பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கிறது- ஆனால் ஆர்வ மிகுதியில் சில மலை கிராமங்கள் பக்கம் செல்ல வேண்டாம். அங்கு குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாமிட்டிருக்கிறது.

கொடைக்கானல் அருகே உள்ள புலியூர், கோம்பை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் குட்டியுடன் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.. எனவே அந்த பக்கம் போக வேண்டாம்..

Kodaikanal tourists should not go to some hill villages because of wildlife camping

கொடைக்கானல் சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தளமாக இருக்கிறது. இங்கு 6 கிமீ தூரத்திற்கு பறந்து விரிந்து காணப்படும் நட்சத்திர ஏரியும், பேரிஜம் ஏரியும் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. இந்த ஏரிகளில் படகு சவாரி செய்வது அலாதியானது. இதுதவிர ஏராளனமான அருவிகள், பூங்காக்கள், சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. கொடைக்கானலில் சுற்றுலா தளங்களை பார்வையிடுவது வரம் என்றால், அங்கு ஓர் இரவு தங்கி, கொடைக்கானலில் அழகை பார்ப்பதும், அதிகாலையில் எழுந்து சூரிய தரிசனம் பார்ப்பதும், குளுகுளு கிளைமேட்டும் பரவசத்தில் ஆழ்த்தும்..

தமிழ்நாட்டிலேயே ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தான் வெப்பநிலை மிக குறைவாக இருக்கும்.. மிகவும் அற்புதமான மலையில் மழைச்சாரலில் நனைந்தபடி, கொடைக்கானலில் சுற்றுலா வருவது நிச்சயம் பலருக்கும் பிடிக்கும். இதனால் தேர்தல் என்ற போதிலும் பலரும் கொடைக்கானலில் குவிந்து வருகிறார்கள்..

கொடைக்கானல் செல்வோர் தராளமாக பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம்.. ஆனால் அங்குமே சில இடங்களில் வனவிலங்கு ஆபத்து உள்ளது. கொடைக்கானலை ஒட்டிய வனப்பகுதியில் யானைகள், காட்டெருமை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் இருக்கின்றன. இதில் காட்டெருமை கொடைக்கானல் நகருக்குள் சர்வ சாதாரணமாக உலாவும். யானைகள் அவ்வப்போது மலைக்கிராமங்களில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தும்.

மலைக்கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றன. அடிக்கடி யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. சில கிராமங்களில் ஊருக்குள் உலா வரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டப்படுவதும், பின்னர் மீண்டும் யானைகள் வருவதும் தொடர்கதையாகவே இருக்கும்..

அந்த வகையில் கொடைக்கானலை அடுத்த புலியூர், கோம்பை ஆகிய மலைக்கிராமங்களுக்கு அருகில் கடந்த 2 நாட்களாக 4 காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டிருக்கின்றன. இந்த யானைகள் பகல், இரவு நேரங்களில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்று நாசம் செய்து வருவது தொடர்கதையாக உள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு செல்லாமல் பீதியில் உள்ளனர் . இதேபோல் குடியிருப்புக்குள் யானைகள் புகுந்துவிடும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தற்போதைய நிலையில் புலியூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களின் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் புலியூர், கோம்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+