கடவுள் தேசத்தின் கனவுப்பாதை..குரங்கணி டூ டாப் ஸ்டேஷன்.. இயற்கை அதிசயத்தின் என்ட்ரி பாயிண்ட்
தேனி: கடவுள் தேசமான கேரளாவின் நுழைவு வாயிலில் பல ஆண்டுகளாக போடப்படாத கனவுப்பாதை தான் குரங்கணி டூ டாப் ஸ்டேசன் பாதை.. இயற்கை அதிசயமாக இந்த இடத்தை வர்ணிக்கலாம். மைனா, கும்கி, அழகர்சாமியின் குதிரை, கோடியில் ஒருவன் உள்பட பல்வேறு தமிழ் சினிமாக்கள் இங்குதான் எடுக்கப்பட்டது. அந்த இடத்தை பற்றி பார்ப்போம்.
இயற்கை பல அதிசயங்களை தன்னிடம் ஒளித்து வைத்திருக்கிறது.அப்படி ஒளித்து வைத்திருக்கும் இடம் எல்லாமே ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைந்திருந்தால் எப்படி இருக்கும்.. அப்படி ஒரு இடம் தான் தேனி மாவட்டம். அங்கே எத்தனை அருவிகள் உள்ளது என்றால் அவர்களாலேயே எண்ண முடியாது. தேனி மாவட்டத்தின் துவக்கமான தேவதானப்பட்டி முதல் குமுளி வரை ஏராளமான அருவிகள் உள்ளன. சுருளி அருவி, கும்பக்கரை அருவி, சின்ன சுருளி அருவி, குரங்கணி அருவி, எலிவால் அருவி என ஏராளமான அருவிகள் உள்ளன.

முல்லை பெரியாறு பாயும் தேனி மாவட்டத்தில் ஒரு போகம் இரு போகம் அல்ல,.. முப்போகம் நெல் விளையும் விவசாய பூமி. திராட்சை, ஏலக்காய், பூண்டின் புகழிடம் தேனி தான். 3 பக்கம் மலையும், ஒருபக்கம் மட்டுமே சமவெளியையும் (வத்தலக்குண்டு) கொண்ட மாவட்டம் என்றால் அது, தேனி மாவட்டம் தான். அங்கு தான் நாம் பார்க்க போகும் குரங்கணி இருக்கிறது.
இந்த இடம் பலருக்கும் தெரிந்த இடமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்த இடம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற டிரக்கிங் சுற்றுலா தளம். ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காட்டுத்தீக்கு பிறகு டிரக்கிங் தடை செய்யப்பட்டது. இப்போது வரை டிரக்கிங் செல்ல அனுமதி கிடையாது. அதேநேரம் டிரக்கிங் போக முடியாது என்றாலும் குரங்கணி மலைப்பாதை மிக அற்புதமான அருவி மற்றும் ஆற்றினை கொண்டிருப்பதால் பலரும் சுற்றுலாவாக வருகிறார்கள். போடியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திலும், தேனியில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திலும் குரங்கணி மலைப்பாதை அமைந்துள்ளது.

போடியில் முந்தல் சோதனை சாவடியை கடந்து இடதுபக்கம் திரும்பினால் மூணாறு போகும் பாதை என்றால், நேராக சென்றால் குரங்கணி வரும். அந்த சாலையில குறிப்பிட்ட தூரம் பயணித்தபிறகு மேற்கு தொடர்ச்சி மலையின் கால்களில் ஏறி பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும். குரங்கணியை நெருங்கினால் உங்களுக்கு அருவிகளும், மாமரங்களின் தோப்பின் வாசமும் உங்களை ஈர்க்கும். அப்படியே தொடர்ந்து பயணித்தால் உங்களை சுற்றி எல்லா பக்கமும் மலை இருப்பதையும் நடுவில் பள்ளத்தாக்கு போல் கொட்டக்குடி கிராமும் குரங்கணி அருவியும் இருப்பதையும் உணர முடியும்.

குரங்கணி அருவி என்பது மலைகளுக்கு நடுவில் உள்ள பகுதியாகும். மிகவும் சுத்தமான தண்ணீர். மலைகளை கிழித்துக் கொண்டு பாயும் அந்த மூலிகை தண்ணீர் உங்களை பரவசத்தில் ஆழ்த்தும். குரங்கணியில் சிறிய அளவில் தான் கடைகள் இருக்கும். அங்கு கண்டிப்பாக செல்போன் சிக்னல் வேலை செய்யாது. பிஎஸ்என்எல் சிஎம் மட்டும் வேலைசெய்தது. எனவே செல்போனில் எந்த டவரும் கிடைக்காது. செல்போனை மறந்து நண்பர்களுடன் பொழுதை கழிக்கலாம். அங்கிருந்து மலைப்பாதையில் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால் மூணாறு பாதையில் உள்ள டாப் ஸ்டேசனுக்கு போய்விட முடியும். மிக அற்புதமான மலைப்பாதையாகும்.

இங்கு நடந்து செல்ல அனுமதித்தால் மிகப்பெரிய அளவில் சுற்றுலாத்தலமாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் இல்லை. ஆனால் அதேநேரம் மூணாறு வழியாக டாப் ஸ்டேசன் சென்று அங்கிருந்து சில கிலோ மீட்டர் காட்டிற்குள் பயணித்து டென்ட்டில் தங்க முடியும். அங்கு அதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. டாப் ஸ்டேசன் டூ குரங்கணி வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் தான் மைனா, கும்கி, அழகர்சாமியின் குதிரை, கோடியில் ஒருவன், அவன் இவன் உள்பட பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல் குரங்கணியில் இருந்து கொழுக்குமலைக்கும் பயணிக்க முடியும். ஆனால் இந்த பாதையில் தான் பலர் காட்டுத்தீயில் இறந்தார்கள் என்பதால் அனுமதி இல்லை. கொழுக்குமலை என்பது ஆசியாவின் மிக உயரமான தேயிலை தோட்டங்கள் உள்ள பகுதியாகும். ஒரு இரவு அங்கு தங்கினால் சொர்க்கத்தை பார்த்துவிட்ட அனுபவம் கிடைக்கும். அவ்வளவு அற்புதமான இடம், போய் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications