வாவ்! எப்படி இருக்கு பாருங்க.. நாட்டின் அழகான சாலைகள்.. லிஸ்டில் தமிழ்நாடும் இருக்கு.. எது தெரியுமா?
சென்னை: பயணங்களை விரும்பும் பெரும்பாலான மக்களுக்கு சாலை வழி பயணங்களே சிறந்ததாக இருக்கும். அப்படி சாலை வழி பயண பிரியர்களுக்கு பிடிக்கும் வகையில் நமது நாட்டில் உள்ள அழகான ரூட்கள் என்னென்ன இருக்கிறது என்பதை இங்கே காணலாம்.
பயணத்தை ரசிக்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு பயணம் பலருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்கும்.. அதிலும் பேருந்துகளில் ஜன்னோலர இருக்கைகள் கிடைத்து விட்டால் போதும்.. அப்படியே இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் பாடல்களை கேட்டுக்கொண்டு சென்றால் அதில் கிடைக்கும் இன்பமே தனிதான்.. சாலையோரம் காணக்கிடைக்கும் பல தரப்பட்ட மக்கள், அவர்களின் வாழ்க்கை முறை கலாசாரம், இயற்கை காட்சிகள் என அனைத்தையும் ஒரு சேர பார்ப்பது சாலை வழி பயணத்தில் தான் முடியும்.

ரயில் பயணங்களில் கூட இது அவ்வளவு சாத்தியம் இல்லை. ஏனென்றால் தண்டவாளங்கள் பெரும்பாலும் ஊருக்கு வெளியே செல்லக்கூடியதாகத்தான் இருக்கும். விமான பயணத்தை பற்றி சொல்லவே வேண்டாம். இதன் காரணமாகவே பலரும் தொலைதூரங்களுக்கு கூட கார், பைக், பேருந்து என சாலை வழி பயணத்தையே விரும்புவதுண்டு... நமது நாட்டில் உள்ள சில சிறந்த சாலைகளை இங்கே காண்போம்.
திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை: மேற்கு தொடர்ச்சி மலையை ரசித்த படியே இந்த சாலைகளில் பயணிக்கலாம். அதிலும் கன்னியாகுமரியை நெருங்க நெருங்க இருபுறமும் பசுமையான மரங்கள் சூழந்து கொண்டு கண்ணுக்கு விருந்தளிக்கும். இந்தியாவின் சிறந்த சாலை வழித்தடங்களில் ஒன்றாக இது உள்ளது.
தனுஷ் கோடி கடற்கரை சாலை: ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி கடற்கரை சாலையில் இருபுறமும் கடல்களை ரசித்தபடியே செல்ல முடியும். கடல் காற்றுக்கு மத்தியில் வாகனங்கள் சீறிப் பாய்ந்து செல்வதை பயணம் என்பதையே மறக்கடிக்கும் அளவுக்கு ரம்மியமான அனுபவத்தை கொடுக்கும்.
மும்பை - புனே எக்ஸ்பிரஸ் சாலை: மலைத் தொடர் ஒட்டி செல்லும் இந்த சாலையும் இருபுறமும் இயற்கையின் அழகை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும். நட்டின் அதிவேக விரைவு சாலைகளில் ஒன்றாக இது உள்ளது.
மூனாறு- தேக்கடி சாலை: கடவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளாவை பற்றி சொல்லவே வேண்டாம். கேரளாவில் சாலைகளில் பயணிப்பதே தனி சுகம்தான். அதிலும் இருபுறமும் தேயிலை எஸ்டேட் சூழந்து கொண்டு எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என இருக்கும்.
உத்தரகாண்டில் உள்ள பவுரி கரால் சாலை: இமயமலை அடிவாரத்தில் அமைந்து இருக்கும் உத்தரகாண்ட் மாநிலம் முழுவதுமே இயற்கை அழகுக்கு பெயர் போனது. சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் இடங்களில் ஒன்றாகவும் இந்த மாநிலம் உள்ளது.
மறவந்தே பீச் சாலை : கர்நாடகாவில் உள்ள இந்த கடற்கரை சாலை... பயணிகள் விரும்பி பயணிக்கும் ஒரு சாலையாகும். ஒரு பக்கம் கடலும் மறுபக்கம் நீர் நிலையும் என இருபுறமும் ரசிக்கும்படியாக இருக்கும். பயண விரும்பிகள் பலரும் இந்த ரூட்டை தேர்வு செய்து பயணிப்பதை பார்க்க முடியும்.












Click it and Unblock the Notifications