கொடைக்கானல் சொகுசு விடுதிகளில் மீண்டும் இப்படியா.. தேடி வரும் இளைஞர்கள்.. அதிர்ந்த அதிகாரிகள்
கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் கிராமத்தில் தங்கும் விடுதிகளில் கஞ்சா பொட்டலங்கள், போதை காளான்கள் வைத்திருந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு சில இடங்களில் கஞ்சா பொட்டலங்கள், போதை காளான்கள் விநியோகம் செய்வது அடிக்கடி நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதேநேரம் இளைஞர்கள் சிலர் கொடைக்கானலின் இயற்கை அழகையும் தாண்டி, போதைக்காளானை தேடி வருகிறார்கள். போதைக்காளான் என்பது கொடைக்கானல் பகுதியிலேயே அபூர்வமாகவே கிடைக்கும். கொடைக்கானல் சொகுசு விடுதிகளில் தங்கி, கஞ்சா, போதைக்காளான் பயன்படுத்த வரும் இளைஞர்களுக்காக சில கும்பல்கள் இங்கு உள்ளன. இவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் நடக்கிறது. கொடைக்கானல் போதைக்காளானை கொரியரில் எல்லாம் அனுப்பி ஒரு கும்பல் சில மாதங்கள் முன்பு கைதானது. அந்த அளவிற்கு கொடைக்கானல் போதைக்காளான் மீது இளைஞர்கள் பைத்தியமாக உள்ளனர். ஆனால் அது உயிருக்கே ஆபத்தானது ஆகும்.

இந்நிலையில் நேற்று கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் கிராமத்தில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் சிவராம் தலைமையில் போலீஸாா் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள். கூக்கால் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் (காட்டேஜில்) நடத்திய சோதனையில் இதே பகுதியைச் சோ்ந்த வீரணன் மகன் தனராஜா (33)விடம் போலீஸாா் சோதனையிட்டனா்.அப்போது அவா் 60 கிராம் போதைக் காளான், 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தார். இவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
இதேபோல் கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை பகுதியில் அனுமதியின்றி சொகுசு விடுதி செயல்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் சிவராம் தலைமையில் வட்டாட்சியா், காவல் துறை அதிகாரிகள், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் அந்தப் பகுதியில் ஆய்வு நடத்தினா். அப்போது அங்குள்ள ஒரு சொகுசு விடுதியின் உரிமையாளரான நிக்சன் மோசஸிடம் போலீஸாா் விசாரணை நடத்தி உள்ளனர். இதில் அந்த விடுதி பல ஆண்டுகளாக அனுமதியின்றி செயல்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த விடுதியை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தார்கள்.
இதுகுறித்து கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் சிவராம் கூறும் போது, கொடைக்கானல் பகுதிகளில் அனுமதி பெறாமல் சொகுசு விடுதிகள் நடத்தப்படுவதாகவும், இவற்றில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்தன. எனவே அனுமதி பெறாமல் சொகுசு விடுதிகளை நடத்தக் கூடாது. மேலும் 'ஹோம் ஸ்டே' என்ற பெயரிலும் அனுமதி பெறாமல் விடுதிகளை நடத்தக் கூடாது. இவ்வாறு நடத்தப்படுபவை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே வட்டக்கானல் பகுதியில் மூன்று சொகுசு விடுதிகள் சீல் வைக்கப்பட்டிருக்கிறது. சோதனை தொடரும் என்று கூறினார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications