ஊட்டிக்கு இந்த வார இறுதியில் சுற்றுலா போனால் 'அந்த தரிசனம்' உறுதி.. நீலகிரி வனத்துறை சூப்பர் முடிவு
ஊட்டி: நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொட்டபெட்டா மலைசிகர சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் அமைப்பதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வருவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படும் என்று வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே வரும் சனிக்கிழமை முதல் சுற்றுலா செல்வோர் ரசிக்கலாம்.
இந்த வார இறுதியில் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.

தற்போதைய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சாலையில் தேயிலை பூங்கா அருகே கற்பூர மரம் ஒன்று சாலையின் குறுக்கே நேற்று விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர், தேவாலா, உப்பட்டி, சேரம்பாடி, எருமாடு, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் பலத்த மழை பெய்தது. இதனால் பந்தலூரில் இருந்து கூடலூர், கோழிக்கோடு செல்லும் சாலையில் தேவகிரி, நீர்மட்டம் பகுதிகளில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக தமிழக-கேரள மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து வந்த ஊழியர்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
தொடர் மழையால் குன்னூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் போன்ற முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் பூங்காக்கள் வெறிச்சோடி இருந்தது. சிம்ஸ் பூங்கா ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் இல்லாததால், அங்கு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த வார இறுதியில் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாளை முதல் அதிகரிக்கும் என தெரிகிறது. சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்த நிலையில், தொட்டபெட்டா மலை சிகர சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் அமைப்பதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.
இதனால் 4 நாட்களாக தொட்டபெட்டா செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை மறுநாள் முதல் தொட்டா பெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வார இறுதியில் ஊட்டிக்கு சுற்றுலா செல்வோர் தொட்டா பெட்டா மலை சிகரத்தை ரசிக்க முடியும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications