ஊட்டியில் காலையிலேயே.. அதுவும் ஒரே நேரத்துலயே.. சுற்றுலா பயணிகள் வருகையால் வித்தியாசமான சிக்கல்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணின்கை மிக அதிகமாக இருக்கிறது. சுற்றுலா பயணிகள் வருகையில் நூதனமான சிக்கலை ஊட்டி சந்தித்துள்ளது. பலரும் காலையில் ஒரே நேரத்தில் ஹீட்டர் போடுவதால், லோடு தாங்காமல் ஆங்காங்கே மின்சாரம் துண்டிக்கப்படுவதாக உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இப்போது அடிக்கிற வெயிலை சமாளிக்க முடியாமல் பலரும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட கோடைவாசல் தளங்களை நோக்கி படை எடுக்கிறார்கள்... நிழலுக்கு கூட ஒதுங்கவே முடியாத அளவிற்கு சென்னை மாறி பல வருடம் ஆகிவிட்டது. வளர்ச்சிக்காக சென்னை பறிகொடுத்ததை தமிழ்நாட்டின் எந்த நகரமும் கொடுக்கவில்லை..

சென்னையிட சென்னையை ஒட்டியுள்ள பல்லாவரம், பள்ளிக்கரணை, தாம்பரம், ஆவடி, எண்ணூர், பூந்தமல்லி போன்ற பகுதிகள் சந்தித்த இழப்புகள் அதிகம். இனிமேல் உருவாக்கவே முடியாத ஏரிகள், மரங்கள், காடுகளை இழந்துவிட்டது.
சென்னை மட்டுமல்ல பெங்களூருக்கு நிகரான கிளைமேட் கொண்ட கோவையும் இப்போது சென்னை போல், பெரிய அளவில் இழப்புகளை சந்தித்து வருகிறது. பொள்ளாச்சி வரை உள்ள சாலையும், அவினாசி வரை உள்ள சாலையுமே அதற்கு சாட்சி.. இதுபோன்ற காரணங்களால் வெயில் என்பது அங்கு வழக்கத்தைவிட கடுமையாக தெரிகிறது.
கொடைக்கானல், ஊட்டியை விட்டுத்தள்ளுங்க.. இங்கு வாழ்வது மட்டுமல்ல.. பயணிப்பதே இனிமையானது தான்!
சென்னை, கோவை மட்டுமல்ல வேலூர், சேலம், மதுரை, நெல்லை உள்பட எல்லா நகரங்களுமே வெயிலின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் திணறுகின்றன. இரவில் மட்டுமே ஏசி பயன்படுத்திய பலர், பகலில் ஏசி போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்.. ஆனால் அதற்கு விலை, மின் கட்டண ரூபத்தில் மிக கடுமையாக வரும் என்பதால் தவிக்கிறார்கள்.. வீட்டில் இப்படி என்றால், அலுவலகத்திற்கு பைக்கில் சென்றால் வெந்து போகும் அளவிற்கு சூரியன் சுட்டெரிக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மிக உயரமான கோடைவாசல் தளங்களாக ஊட்டி, கொடைக்கானல் இருக்கின்றன. இந்த இரண்டு நகரங்களுக்கு படை எடுக்கும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தைவிட மிக அதிகமாக உள்ளது. ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகையால் வித்தியாசமான சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்ன சிக்கல் என்றால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்துள்ளதால், அவர்கள் காலையில் பனியில் குளிக்க சுடுதண்ணீரையே விரும்புகிறார்கள்.
ஊட்டியில் ஹீட்டர் போடாமல் குளிக்க முடியாத நிலையே இருக்கிறது. இதனால் காலை நேரங்களில் ஒரே நேரத்தில் பலரும் ஹீட்டர் போடுவதால் , மின் இணைப்பின் லோடு தாங்காமல் சில இடங்களில் மின்சாரம் கட் ஆகிவிடுவதாக கூறப்படுகிறது. உள்ளூர்வாசிகள் அடிக்கடி மின்சாரம் துண்டிப்புக்கு உள்ளாவதால் அவதிப்படும் நிலை கடந்த சில நாட்களாக இருக்கிறதாம்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications