ராமர் கோயில் திறக்குறதுல அண்ணிக்கும் மனசு கஷ்டம்தான்! கனிமொழி சொன்னதும்! துர்கா ஸ்டாலினின் ரியாக்ஷன்
சேலம்: அயோத்தி ராமர் கோயில் குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் திமுக எம்பி கனிமொழி ஒரு கேள்வி எழுப்பினார்.
அயோத்தியில் ராமர் பிறந்த ஜென்பூமியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த கோயில் கட்டும் பணிகள் தொடங்கின.

சுமார் 2.7 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் குடமுழுக்கு இன்று நடைபெறுகிறது. சுமார் 2000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த கோயிலில் மக்கள், விஐபிக்கள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள்.
இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவர் அங்கு 4 மணி நேரம் இருப்பார். இந்த கோயில் கும்பாபிஷேகத்திற்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என 7000 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வானது உலகம் முழுவதும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ராமர் கோயில் திறப்பு என்பது பாஜக வாக்கு அரசியலாக பார்க்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் சேலம் திமுக இளைஞரணி மாநாட்டிலும் இதை பற்றிதான் பேச்சு இருந்தது.

இந்த மாநாட்டில் திமுக எம்பி கனிமொழி பேசுகையில் நாம் பெரியாரின் பிள்ளைகள். இங்கே கொள்கைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வடஇந்தியாவில் கோவிலை திறக்கிறார்கள். அந்த கோயில் திறப்பதை பற்றி நான் எதுவும் சொல்ல போவதில்லை. ஏன் குடியரசு தலைவரை அழைக்கவில்லை என நான் கேட்க போவதும் இல்லை.
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இருக்கிறார். அவரிடம் நான் ஒரு சந்தேகம் கேட்கிறேன். ஒரு கோயிலை முழுசா முடிக்காமல் திறக்கலாமா? உங்களைத்தான் கேட்கிறேன் (அமைச்சரை பார்த்து) திறக்கக் கூடாது இல்ல? ஒரு கோயிலை முழுசா கட்டி முடிக்காமல் திறக்கக் கூடாது. ஆனால் இன்று இருக்கக் கூடிய பாஜக என்ன சொல்கிறார்கள், நாங்கள்தான் இந்து மதத்தை காப்பாற்றுகிறோம்.
நாங்கள்தான் சனாதன தர்மத்தை காப்பாற்றுகிறோம். நாங்கள்தான் கோயில்களை எல்லாம் காப்பாற்றுகிறோம். அதனால் எல்லா கோயிலையும் எங்ககிட்டயே கொடுத்துவிடுங்கள் என்கிறார்கள். எங்க அண்ணி கூட உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் மன கஷ்டமாக இருக்கும். கட்டி முடிக்காத கோயிலை திறக்கக் கூடாது என்பது இந்து மதம். ஆனால் அதை இவர்கள் அரசியலாக்குகிறார்கள்.
இந்துக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசியலுக்காக அந்த கோயில் திறக்கப்படுகிறது. இதுக்கு அரை நாள் லீவு வேற! தனியார் அறக்கட்டளை திறக்கும் நிகழ்வுக்கு இலவசமாக ரயில் அனுப்புகிறார்கள். இதையெல்லாம் நாம் கேள்வி கேட்கக் கூடாது. கேள்வி கேட்டால் நமக்கு ஐஸ் (ICE) வைப்பார்கள். ஐஸ்ன்னா என்ன தெரியுமா Income Tax, CBI, ED.
யார் கேள்வி கேட்டாலும் இவங்க 3 பேரும் நம்மை தேடி வருவார்கள். ஆனால் இதற்கெல்லாம் பயப்படக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. நீங்கள் என்ன செய்தாலும் உங்களை எதிர்ப்போம். உங்களுடைய கருத்துகளை எதிர்ப்போம், கருத்துகளை எதிர்த்து நின்று மத்தியில் உள்ள பாஜக அரசை மாற்றிக் காட்டுவோம் மாற்றிக் காட்டுவோம், அதில் மாற்றமில்லை என கனிமொழி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications