Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குற்றாலம் போறீங்களா? பக்கத்தில் இருக்கிற இந்த 4 அணைகளை மிஸ் பண்ணாதீங்க! குளித்து மகிழ சூப்பர் இடம்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் அனைவரின் ‛பேவரைட்' சுற்றுலாத்தலமாக குற்றாலம் உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டிய தொடர் விடுமுறைக்கு குற்றாலம் வருபவர்கள் அருவிகளில் மட்டுமின்றி அதனருகே இயற்கை எழில் சூழ்ந்துள்ள 4 அணைக்கட்டுகளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும். அந்த அணைகளின் விபரம் வருமாறு:

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டமான தென்காசி உள்ளது. திருநெல்வேலியில் இருந்து பிரிந்து தனிமாவட்டமாக உருவெடுத்துள்ள தென்காசி சுற்றுலா தலங்களுக்கு மிகவும் பெயர் பெற்றது. ஆன்மிக தலங்கள், அருவிகள், அணைகள் என மக்கள் வந்து செல்ல ஏராளமான இடங்கள் உள்ளன.

 Tenkasi Tourism: People must visited 4 dams near Courtallam and How to reach there? details here

இதில் அனைவருக்கும் ‛பேவரைட்' இடம் என்றால் அது குற்றாலம் தான். மலை முகடுகள் வழியாகவும், மூலிகை செடிகளுக்கும் நடுவாகவும் வழிந்தோடி பேரிச்சலுடன் கொட்டும் அருவியில் குளிப்பது என்பது அலாதி இன்பத்தை வழங்கும். இதனால் தான் ஆண்டுதோறும் குற்றாலத்துக்கு அதிகமானவர்கள் வந்து செல்கின்றனர்.

குற்றாலம் அருகேயே: குற்றாலம் வரும் மக்கள் பெரும்பாலும் மெயினருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் மட்டும் குளித்துவிட்டு சென்று விடுகின்றனர். உண்மையில் இந்த அருவிகளை தவிர சில முக்கிய அணைகளும் குளித்து மகிழ வசதியாக குற்றாலத்தின் அருகேயே உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயமின்றி இந்த அணைப்பகுதியில் குளிக்கலாம். அப்படி குற்றாலம் வருவோர் கட்டாயம் சென்று குளித்து மகிழ வேண்டிய 4 முக்கிய அணைக்கட்டுகளை பற்றிய விபரம் வருமாறு:

அடவிநயினார் அணை: குற்றாலம் அருகே செங்கோட்டை தாலுகா மேக்கரை எனும் இயற்கை எழில் சூழ்ந்த கிராமத்தையொட்டிய மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இந்த அணை அமைந்துள்ளது. குற்றாலத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த அணை அமைந்துள்ளது. அணையில் இருந்து நீர் நிரம்பி வழியும் இடம் அருவி போல் இருக்கும். இங்கு அனைத்து வயது மக்களும் அச்சமின்றி குளிக்கலாம்.

குண்டாறு அணை: குற்றாலம்-செங்கோட்டை இடையே குண்டாறு அணை அமைந்துள்ளது. குற்றாலத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இந்த அணை அமைந்துள்ளது. இந்த அணையும் பார்க்க சூப்பராக இருக்கும். இந்த அணையில் நிரம்பி தண்ணீர் வெளியேறும் இடம் அருவியை போன்று இருக்கும். இந்த இடத்தில் மக்கள் குளித்து மகிழலாம்.

ராமநதி: குற்றாலத்தில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் ரோட்டில் மாதாபுரம் என்ற ஊரில் இருந்து மேற்குப்புறமாக 3 கிலோமீட்டர் தொலைவில் இந்த அணை அமைந்துள்ளது. குற்றாலத்தில் இருந்து இந்த அணை 17 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த அணையை பொறுத்தமட்டில் சிறப்பு ஒன்று உள்ளது. அதாவது மேற்கூறிய 2 அணைகளிலும், அணையில் இருந்து வெளியேறும் நீரில் தான் நாம் குளிக்கலாம்.

ஆனால் ராமநதி அணையை பொறுத்தமட்டில் அணைக்கு உள்ளே தண்ணீர் வரும் இடத்தில் நாம் குளிக்கலாம். அதாவது மலையில் இருந்து ஆறு போல் தண்ணீர் வந்து தான் அணையில் சேரும். நாம் அந்த ஆற்றில் குளிக்கலாம். சுற்றிலும் மரங்கள் சூழ மண் பாதை வழியாக நாம் சென்று இந்த தண்ணீரில் குளிப்பது அதீத மகிழ்ச்சியை தரும்.

கடனாநதி அணை: குற்றாலத்தில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் இந்த அணை அமைந்துள்ளது. குற்றாலத்தில் இருந்து அம்பை செல்லும் ரோட்டில் ஆழ்வார்குறிச்சி அருகே இந்த அணை அமைந்துள்ளது. இந்த அணைப்பகுதியிலும் மக்கள் குளித்து மகிழலாம். இந்த 4 அணைகளிலும் சமீபத்தில் பெய்த கனமழையால் முழுவதுமாக நிரம்பி உள்ளன. இதனால் பொங்கல் விடுமுறைக்கு குற்றாலம் வருவோர் இந்த அணைகளுக்கு சென்று குளித்து மகிழலாம்.

கவனம் தேவை: இருப்பினும் எந்த காரணத்தை கொண்டு நீங்கள் அணைப்பகுதியில் குளிக்க முயற்சிக்க கூடாது. இந்த அணைகள் அனைத்தும் ஆழமானவை. அதோடு சமீபத்திய மழையால் முழு கொள்ளவை எட்டியுள்ளன. இதனால் அணைப்பகுதியில் குளிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதோடு நீங்கள் செல்லும் வேளையில் வனத்துறை அல்லது பொதுப்பணித்துறை அல்லது மாவட்ட நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கலாம். இந்த கட்டுப்பாடுகள் என்பது பாதுகாப்பு கருதியே விதிக்கப்பட்டு இருக்கலாம். அப்படி என்றால் அவர்கள் கூறும் இடத்தில் மட்டுமே குளித்து விட்டு வரலாம்.

என்ஜாய் நிச்சயம்: எப்படியாக இருந்தாலும் சரி இந்த 4 அணைகளுக்கும் நீங்கள் சென்றால் நிச்சயம் என்ஜாய் பண்ணலாம். ஏனென்றால் குற்றாலத்தில் இருந்து இந்த 4 அணைகளுக்கும் செல்லும் பாதைகள் என்பது மரங்கள், செடிகள் சூழ பச்சை பசேல் என காட்சி அளிக்கும். இதனால் குற்றாலம் வருவோர் இந்த 4 அணைகளுக்கும் சென்று குளித்து மகிழலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+