இரவில் சிசிடிவியில் தெரிந்த அந்த உருவம்.. அம்பாசமுத்திரத்தை அலறவிடும் கரடி.. பீதியில் மக்கள்
திருநெல்வேலி: அம்பாசமுத்திரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புகளில் கரடி நடமாட்டம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்னர் பெண் ஒருவர் இங்கு கரடியால் தாக்கப்பட்டிருப்பதால், உடனடியாக கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீப காலங்களாக வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. குடியிருப்பு கட்டமைப்புகள் குறித்து போதிய திட்டமிடல் இல்லாததால், இந்த ஆக்கிரமிப்புகள் மேலும் மேலும் அதிகரிக்கிறது. இது வாழ்விடங்களில் வாழ்விடங்களை குறுக்கீட்டை ஏற்படுத்துகிறது. குறிப்பாக யானைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

பொதுவாக யானைகளுக்கு சிறந்த நினைவு திறன் இருக்கும். இப்படிப்பட்ட யானைகள் சிறு வயதில் தங்கள் குழுக்களுடன் காட்டை சுற்றி வரும். சில ஆண்டுகள் கழித்து, இது வளர்ந்த பின்னர் மீண்டும் கட்டை ரவுண்ட் அடிக்கும்போது, தான் பார்த்த இடத்தில் புதியதாக மனித குடியிருப்புகள் அமைந்திருப்பது யானைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். மட்டுமல்லாது மனிதர்கள் யானைகளை துரத்த முயலும்போது அது, மனித-வனவிலங்கு மோதலாக வெடிக்கிறது.
ஏறத்தாழ அனைத்து விலங்குகளுக்கும் இதே நிலைமைதான். காட்டின் பரப்பளவு சுருங்க, சுருங்க வன விலங்குகள் மனித குடியிருப்புகளுக்கு வருகின்றன. சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகள் அதிகம் காயமடைந்திருக்கும்போது அது ஈஸியான இரையான மனிதர்களை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது. அதேபோல, இந்த வரிசையில் தற்போது கரடிகளும் இனைந்திருக்கின்றன.
கரடிகள் மனிதர்களை தேடி வருவது கிடையாது. ஆனால் யதார்த்தமாக மனிதர்களை பார்த்துவிட்டால் அவர்களை பலமாக தாக்கிவிடும். அதாவது, புலி போன்ற மிருகங்கள் கூச்ச சுபாவம் உடையவை. எதிர்பாராத நேரத்தில் மனிதர்களின் நடமாட்டத்தை உணர்ந்தால் பெரும்பாலும் விலகி போய்விடும். ஆனால், கரடி அப்படி கிடையாது. கரடிக்கு இதுபோன்ற சர்ப்ரைஸ் பிடிக்காது. தூரத்தில் கரடி இருப்பதை பார்த்துவிட்டால் அதன் காதில் விழும்படி சத்தமிட வேண்டும்.
இப்படி சில முயற்சிகள் மேற்கொண்டாலும் கூட கரடியின் தாக்குதலிலிருந்து தப்புவது கடினம். புலியிடமிருந்து கூட நீண்ட முயற்சிக்கு பின்னர் தப்பிவிடாலம், ஆனால் கரடியிடம் தப்பிக்க முடியாது என்று வனத்துறையினர் கூறுகின்றனர்.
இவ்வளவு ஆபத்தான மிருகம்தான் தற்போது, அம்பாசமுத்திரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக கரடி ஒன்று உலா வந்துகொண்டிருக்கிறது. கோட்டைவிளைப்பட்டியில் வைகுண்டம் என்பவர் வீட்டிற்கு அருகில் கரடியின் நடமாட்டம் இருப்பதை சிசிடிவி காட்சிகள் உறுதி செய்திருக்கின்றன. இவை இரவு நேரங்களில் வீட்டு சுவர்களில் ஏறி, வீடுகளில் இரை தேடி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் இதே பகுதியில் அதிகாலை வேளையில் பெண் ஒருவர் கரடியால் கடுமையாக தாக்கப்பட்டார். எனவே வனத்துறையினர் உடனடியாக கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications