அமெரிக்காவில் ஜாலியாக சுற்றுலா சென்ற 2 இந்திய பெண்கள்: எந்த பெற்றோரும் பார்க்கக்கூடாத கோலம்
நியூயார்க்: தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் புலகண்டம் மேகனா ராணி . இவரது தோழி முல்கனூரை சேர்ந்த கடியால பாவனா . இவர்கள் 2 பேரும் 3 ஆண்டுகளுக்கு முன் மேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றனர்.படிப்பை முடித்துவிட்ட நிலையில், நண்பர்கள் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக தங்கி அந்நாட்டில் தற்போது வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இவர்கள் இருவரும் அண்மையில் சுற்றுலா சென்றனர். அதுவே அவர்களுக்கு இறுதி பயணமாக அமைந்தது.
இந்தியாவில இருந்து சென்ற ஏரளமானோர் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார்கள். அதேபோல் பலர் அமெரிக்காவில்சென்று படிக்கிறார்கள். அமெரிக்காவில் படித்தால் நல்ல சம்பளத்தில் அங்கேயே வேலைக்கு சேர முடியும் என்பதால் அமெரிக்காவில் போய் படிக்க பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியர்கள் பலர் அமெரிக்காவில் படிக்க விசா வாங்க இன்றும் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு,கேரளா உள்ளிட்ட தென்மாநிலத்தவர் தான் அமெரிக்காவில் வேலைக்கு சேரவும், படிக்கவும் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி அமெரிக்காவில் படித்து வந்த தெலுங்கானா மாநில இளம் பெண்களுக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்த புலகண்டம் மேகனா ராணிக்கு 25 வயது ஆகிறது. இவரது தோழி முல்கனூரை சேர்ந்த கடியால பாவனா (24). இவர்கள் 2 பேரும் 3 ஆண்டுகளுக்கு முன் மேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளனர்.படிப்பை முடித்துவிட்ட நிலையில், நண்பர்கள் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக தங்கி அந்நாட்டில் தற்போது வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் மேகனா, பாவனா உள்பட 8 பேர் 2 கார்களில் கலிபோர்னியா மாகாணத்துக்கு சுற்றுலா புறப்பட்டுள்ளனர். அதில் மேகனா, பாவனா தனியாக ஒரு காரிலும், மற்ற தோழிகள் 6 பேரும் மற்றொரு காரிலும் சென்று கொண்டிருந்தார்கள். அளபாமா ஹில்ஸ் ரோட்டில் வளைவு ஒன்றில் காரை திருப்பியபோது மேகனா மற்றும் பாவனா பயணித்த கார் திடீரென மலை பள்ளத்தாக்கில் தவறி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் மேகனா மற்றும் பாவனா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த மீட்புபடையினர் பள்ளத்தாக்கில் விழுந்து கிடந்த 2 பேரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து பெண்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அமெரிக்காவுக்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications