வீக் எண்ட்+ ரம்ஜான்.. சின்னராசை கையில் பிடிக்க முடியல.. திணறுதே ஊட்டி.. கடும் போக்குவரத்து நெரிசல்
நீலகிரி: உதகையில் இருந்து குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் குவிந்துள்ளதால் சுமார் ஐந்து கிமீ தொலைவுக்கு வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் வரிசையாக அணிவகுத்து நின்றன.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இப்போது கோடை வெயில் படுத்தி எடுத்து வருகிறது. வெப்பம் உச்சத்தில் இருப்பதால் பகல் நேரத்தில் வெளியே சென்று திரும்புவதே பெரும் போராட்டமாக ஆகிவிட்டது.

அந்தளவுக்கு வெப்பம் உச்சத்தில் இருக்கிறது. படுத்தி எடுக்கும் இந்த உயர் வெப்பம் காரணமாகப் பொதுமக்கள் வார இறுதி நாட்களில் மலைப் பிரதேசங்களுக்கு விசிட் அடித்து வருகிறார்கள்.
வீக் எண்ட்: அதிலும் இப்போது பள்ளிகளுக்குக் கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வார இறுதி வந்துவிட்டாலே குடும்பத்துடன் சில் கிளைமேட் இருக்கும் இடத்திற்குப் படையெடுத்து வருகிறார்கள். அதன்படி மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகிறார்கள்.
தமிழ்நாடு மட்டுமின்றி கோடை சீசனை முன்னிட்டு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கூட தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக அங்குக் கூட்டம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

தென்னிந்தியாவில் எங்குமே இல்லாத 'ஜில்' கிளைமேட்.. ஊட்டி மற்றும் கொடைக்கானலில் மட்டும் இருப்பது ஏன்?
போக்குவரத்து நெரிசல்: இந்த வாரம் ரம்ஜான் காரணமாகத் தொடர் விடுமுறை வந்தது. இந்த லாங் வீக் எண்ட் காரணமாக உதகையில் உள்ள சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வார இறுதியில் திடீரென உதகையில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலை மற்றும் உதகை நகரப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒரே வாரத்தில் அதிகப்படியான வாகனங்கள் இருந்தால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் மட்டுமின்றி மற்ற சாலைகளிலும் கூட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அமை வேகத்திலேயே நகர்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்தவர்களுடன் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் வந்ததே இதற்குக் காரணமாகும்.
பொதுமக்கள் அவதி: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் டிராபிக் இந்தளவுக்கு அதிகரித்துள்ளதால் நீலகிரி மக்களால் அவசர வேலைகளுக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் முணுமுணுக்கிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications