தாய்லாந்தில் புலியுடன் செல்ஃபி எடுக்க ஆசை.. இந்திய சுற்றுலா பயணி வயிற்றில் கை வைத்ததுமே.. பாருங்க
பாங்காங்: தாய்லாந்து நாடு இந்திய சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு கட்டமைப்புகளை அந்த நாடு ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான ஜூவில் ஆடிப்போக வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்ற போது புலியால் தாக்கப்பட்டிருக்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாய்லாந்தில் ஃபூகெட் மாகாணம் தெற்கு தாய்லாந்தில் அமைந்திருக்கிறது. இது தாய்லாந்தின் மிகப்பெரிய தீவாகும். அந்தமான் கடலில் அமைந்திருக்கிறது. ஃபூகெட்டில் சீன மொழி பேசும் மக்கள் மிக அதிகம் ஆகும். இங்கு ஏராளமான சீன ஆலயங்கள் மற்றும் சீன உணவகங்கள் உள்ளன. இங்கு ஃபூகெட் ரவாய், படோங், கரோன், கமலா, கட்டா யாய், கட்டா நொய் மற்றும் மை காவோ போன்ற பல அற்புதமான கடற்கரைகள் உள்ளன. , கூம் உணவகங்கள் இங்கு வரும் மக்களுக்கு பிடித்த இடமாக உள்ளது.

சுற்றுலா பயணிகள்
ஃபூகெட்டில் வன உயிரியல் பூங்காவில் புலியுடன் பார்வையாளர்களை செல்பி எடுக்க பூங்கா ஊழியர்கள் அனுமதிக்கிறார்கள். பூங்கா ஊழியர்களின் பேச்சை கேட்டு நாய் குட்டி போல் நடந்து வரும் புலிகள், சுற்றுலா பயணிகளை ஒன்றும் செய்யாது. இதனால் பல சுற்றுலா பயணிகள் விலங்குகளுடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் இந்திய சுற்றுலா பயணி ஒருவர் புலியுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளார். அவருக்கு நடந்தது பற்றி பார்ப்போம்.
ஃபூகெட் புலி
ஃபூகெட்டில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் உள்ள புலியை கூண்டில் இருந்து திறந்த பயிற்சியாளர், அதனை இந்திய சுற்றுலா பயணியுடன் அனுப்புகிறார். அவர் புலியின் கழுத்தில் உள்ள செயினை பிடித்தபடி நடந்து வருகிறார். பயிற்சியாளரும் உடன் வருகிறார். அப்போது இந்திய சுற்றுலா பயணி, திடீரென புலிக்கு பக்கத்தில் அமர்ந்து செல்பி எடுக்க முயன்றார். இதை பார்த்த புலி கோபம் அடைந்து அவரை கடித்து குதற தொடங்கியது. புலி தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரது நிலை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை..
செல்ஃபி எடுக்க முயன்ற வீடியோ
இந்த வீடியோவை sidhshuk என்ற பயனர் X தளத்தில் மே 29 தேதி பதிவிட்டார். அதில் அவர் கூறுகையில், "தாய்லாந்தில் ஒரு இந்திய சுற்றுலா பயணி புலியால் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது. புலிகளை செல்லப்பிராணிகளாக வைத்திருக்கும் இடங்களில் இதுவும் ஒன்று, இங்கு மக்கள் புலியுடன் செல்ஃபி எடுக்கலாம், உணவளிக்கலாம்" என்று கூறியிருந்தார்.
Apparently an Indian man attacked by a tiger in Thailand.
— Sidharth Shukla (@sidhshuk) May 29, 2025
This is one of those paces where they keep tigers like pets and people can take selfies, feed them etc etc.#Indians #tigers #thailand #AnimalAbuse pic.twitter.com/7Scx5eOSB4
சுற்றுலா பயணிக்கு என்னாச்சு
இந்த வீடியோ பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களுக்குள், இந்த வீடியோ 1.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 5,000 க்கும் மேற்படடோர் லைக்கும் செய்துள்ளர். இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவிற்கு ஆன்லைனில் கடும் எதிர்வினைகளும் வந்துள்ளன. பல நெட்டிசன் குறிப்பிட்ட இந்திய சுற்றுலா பயணிக்கு என்னாச்சு, அவரது நிலைபற்றி சொல்லுங்கள் என கவலை தெரிவித்தனர். இன்னும் சில சுற்றுலா பயணிகள் , காட்டு விலங்குகளைஇப்படி நடத்துவதால், அவை சில நேரங்களில் எதிர்வினை ஆற்றுவதாக கூறினார்கள். என்ன தான் , புலி , யானைகளை செல்லப்பிராணியாக வளர்த்தாலும், ஒரு நாள் கோபப்பட்டு முரட்டு தனமாக நடக்க வாய்ப்பு உள்ளது.

வயிற்றில் கை வைத்தால் பிடிக்காது
பொதுவாக புலியின் உயரத்திற்கு கீழ் மனிதன் தோன்றும் அளவிற்கு இருந்தால், புலி தாக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் நெட்டிசன்கள். மேலும் புலியின் வயிற்றை இந்திய சுற்றுலா பயணி தொட்டுள்ளார். அதுவும் புலியை கோபப்படுத்தி இருக்கும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
அதேநேரம் இதுபோன்ற வனவிலங்கு சுற்றுலா நடவடிக்கைகளை அதிகாரிகள் இன்னும் கடுமையாக விசாரித்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நெட்டிசன்கள் வைத்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications