வால்பாறை டூ சாலக்குடி.. பயணம் செய்ய முடியாது .. கேரள வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலை தொடர் மலை காரணமாக பழுதடைந்துள்ளது. இதனால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழுமையாக சாலை சீரமைக்கப்பட்டவுடன் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று கேரள வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை மிகச்சிறந்த சுற்றுலா தலம் ஆகும். இயற்கையான சுற்றுலா தலமான வால்பாறைக்கு இரண்டு வழிகள் உள்ளன. பொள்ளாச்சியில் இருந்து ஒருவழியும், கேரளாவில் இருந்து சாலக்குடி வழியாக இன்னொரு வழியும் இருக்கிறது. இதல் மேற்கு தொடர்ச்சி மலையில், வால்பாறை முதல் சாலக்குடி வரையிலான தூரம் சுமார் 100 முதல் 110 கிலோ மீட்டர் வரை, அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.

ஏராளமான வனவிலங்குகள் உள்ள இந்த சாலையில், ஏராளமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த சாலையில் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல் சுமார் 4மணி நேரம் வரை ஆகிறது. இந்த சாலையில் மலக்கப்பறை தவிர வேறு இடங்களில் உணவகங்களோ அல்லது தங்கும் வசதிகளோ அதிகம் இருக்காது. இந்த சாலை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான சாலையாக இருக்கிறது. இந்நிலையில் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலை அண்மையில் பெய்த தொடர் மலை காரணமாக பழுதடைந்துள்ளது. இதனால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது
வனத்துறையினர் கூறுகையில் வால்பாறை சாலக்குடி சாலையில் ஆனைக்காயம் அருகில் ஒரு வளைவில் மழையின் காரணமாக விரிசல் விழுந்து பாலம் சேதம் அடைந்துள்ளனர். இதனால் வால்பாறையில் இருந்து சோலையார் அணை வழியாக சாலக்குடி செல்ல, வேன், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு கேரளா வனத்துறையினர் அனுமதி இல்லை என அறிவித்துள்ளனர்.
மேலும் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது என்றும் வால்பாறையில் இருந்து சோலையார் அணைக்கு வழியாக சாலக்குடி செல்லும் அனைத்து வாகனங்களும் வாளைச்சால் வனத்துறை சோதனை நிறுத்தப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
என்ன பிரச்சனை
வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் யானைக்கயம் என்ற பகுதியில் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி பாலம் இடிந்து விழுந்தது. அந்த வழியாகச் செல்லும் வாகனங்களை நிறுத்தப்பட்டன.பெரும் சிரமங்களுக்கு பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
இதையடுத்து சம்பவ இடத்தை ஆய்வு செய்த கேரள மாநிலத்தின் திருச்சூா் மாவட்ட ஆட்சியா், இடிந்த பாலம் மற்றும் சாலை கட்டுமானப் பணிகளை நவம்பா் 10-ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் இணை சாலை அமைப்பதற்காக மரங்களை வெட்டவும், சாலை கட்டுமானத்துக்குத் தேவையான பொருள்கள் மற்றும் இயந்திரங்களை கொண்டு வந்து அப்பகுதியில் வைக்க வனத் துறையிடம் அனுமதி பெறாவில்லை.. இதனால் பொதுப்பணித் துறையால் கட்டுமானத்தை உடனடியாகத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பொது போக்குவரத்து உள்பட அவ்வழியாகச் செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் வனத் துறையின் வாழைசால் சோதனைச் சாவடி வரை மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் இந்தப் பகுதியில் பாலம் மற்றும் சாலை கட்டுமானப் பணிகள் இன்று முதல் தொடங்கி உள்ளது. இதையடுத்துபோக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணி விரைந்து முடிந்து அடுத்த 15 நாள்களுக்குள் இந்த வழியில் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications