வங்கக்கடலில் நெருங்கும் புயல்.. சென்னையில் மார்க் செய்யப்பட்ட 53 இடங்கள்.. இதுதான் ரொம்ப முக்கியம்!
சென்னை: தமிழ்நாட்டின் வடக்கு பகுதியில் டிசம்பர் 4ம் தேதி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு முக்கியமான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
கடந்த 27-11-2023ம் தேதி காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நேற்று (28-11-2023) காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதுதான் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிமை அடைந்தது.

எங்கே செல்லும்: இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும்
மழை அப்டேட்; தென்இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த புயல் வடக்கு தமிழ்நாடு அல்லது தெற்கு ஆந்திரா இடையே டிசம்பர் 4ம் தேதி கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில நாட்களில் மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது என்று வானிலை கணிப்பு மாடல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 24- 36 மணி நேரத்தில் இது தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின் மேற்கு வடமேற்கு திசையில் செல்லும்.
டிசம்பர் 1ம் தேதி: அதன்பின் டிசம்பர் 1ம் தேதி இது புயலாக மாறும். அதன்பின் இது தீவிர புயலாக மாறி.. பின்னர் டிசம்பர் 2-3ம் தேதிகளில் அதி தீவிர புயலாக மாறும். பெரும்பாலும் இந்த சமயத்தில் புயல் நகர்ந்து நகர்ந்து டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கு கிழக்கு பகுதிக்கு வரும்.
ஸ்பாஞ்ச் சிட்டி: சென்னையில் முன்பெல்லாம் எப்போது மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பொதுவாக தண்ணீர் அதிக நேரம் தேங்கி இருக்கும். அதன்படியே சென்னையில் கடந்த வாரம் கனமழை பெய்து வந்தது. அதிலும் கடந்த வாரம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்தது.
ஆனால் சென்னையில் கனமழை பெய்தும் கூட.. எங்கும் வெள்ளம் தேங்கவில்லை. தற்போது சென்னையில் வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க வெள்ள நீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழாய்கள் தற்போது பலன் அளிக்க தொடங்கி உள்ளன.
சாலை ஓரங்களில் பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர் .முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் இந்த வெள்ள நீர் வடிகால் அமைப்பு சென்னை முழுக்க 90% நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஸ்பாஞ்ச் சிட்டி: இந்த நிலையில்தான் சென்னையை ஸ்பாஞ்ச் சிட்டியாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் இருக்கும் பொது இடங்களை, திறந்தவெளி பகுதிகளை ஸ்பாஞ்ச் பகுதிகளாக மாற்ற முடிவு செய்துள்ளனர். சென்னையில் மொத்தம் 53 இடங்களில் ஸ்பாஞ்ச் அமைக்கப்பட்டு உள்ளது.
இது அங்கே இருக்கும் மழை நீர் வடிகால் அமைப்புடன் இணைக்கப்பட்டு உள்ளது.சென்னை முழுக்க இந்த பார்க் கொஞ்சம் கொஞ்சமாக அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது 53 இடங்களில் ஸ்பான்ச் அமைக்கப்பட்டு உள்ளது.
சுற்றுவட்டாரங்களில் ஏற்பட்ட வெள்ளத்தை உடனடியாக வெளியேற்ற இந்த பார்க் உதவியாக உள்ளது. இது ஒரு குளம் போன்ற அமைப்பு ஆகும். மற்ற பகுதிகளில் உள்ள தண்ணீர் இங்கே நிரம்ப வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கும். மழை காலங்களில் மற்ற இடங்களில் இருந்து தண்ணீர் இந்த இடத்திற்கு வேகமாக வரும். மழை பெய்தால் தானாக இந்த பகுதிகள் தண்ணீரை உறிஞ்சி பூமிக்கு அனுப்பி விடும்.
கடற்பாசி: முதல் கட்டமாக இப்படி பல இடங்களில் ஸ்பாஞ்ச் பூங்காக்களை அமைக்க உள்ளார். கடற்பாசிகள் மூலம் இந்த ஸ்பாஞ்ச் பூங்காக்களை முதல் கட்டமாக அமைக்க உள்ளனர். வித்தியாசமான கட்டுமானம் மூலம் தரைப்பகுதி வேகமாக தண்ணீரை உறிஞ்சும் வசதியை ஏற்படுத்த உள்ளனர்.
மாத்தூர், எம்எம்டிஏ, திருவெற்றியூர் உள்ளிட்ட 5 இடங்களில் இருக்கும் பூங்காக்களை முதல் கட்டமாக தேர்வு செய்து ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்க உள்ளனர். இயற்கையாக தண்ணீரை உறிஞ்சி அது பூமிக்கு கீழ் தண்ணீரை அனுப்பும். இதற்காக 7 கோடி ரூபாய் முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications