வடகிழக்கு பருவமழை வருது.. அதுக்கு முன்னாடி அரபிக்கடலில் உருவாகும் ராட்சசன்.. வானிலை மையம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் 17-ல் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ள நிலையில் இந்த அறிவிப்பை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இது வடகிழக்கு பருவமழைக்கு தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வங்கக்கடலில் ஏற்பட்டு வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் 19ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட எச்சரிக்கையில் இது தொடர்பாக குறிப்பிட்டு உள்ளது.

வானிலை எச்சரிக்கை: தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
15.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
.
16.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

18.10.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி
மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

A new low pressure is going to start in Bay of Bengal says Tamil Nadu Weather Department IMD.

19.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20.10.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21.10.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஊருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): தேக்கடி (தேனி) 10, களியல் (கன்னியாகுமரி) 8 திற்பரப்பு (கன்னியாகுமரி). பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 6. மணமேல்குடி (புதுக்கோட்டை), தென்காசி, மிமிசல் (புதுக்கோட்டை) தலா 5, பாலமோர் (கன்னியாகுமரி), வாடிப்பட்டி (மதுரை), RSCL-2 மண்டியம்பாக்கம் (விழுப்புரம்), சாத்தியார் (மதுரை) தலா 4. செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை) 3 மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+