3 நாள் கழிச்சு என் வீட்டுக்கு போறேன்.. அங்க எனக்காக ஒருத்தன் காத்துகிட்டு இருப்பான்! நடிகர் பரபரப்பு
சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கங்கள் முடிந்து 3 நாட்கள் கழித்து எனது வீட்டிற்கு செல்ல போவதாக சின்னத்திரை நடிகரும் பாக்கியலட்சுமி புகழ் கோபி கதாபாத்திரமுமான சதீஷ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னை வழியாக ஆந்திராவுக்கு சென்ற மிக்ஜாம் புயல் போகும் போது வடதமிழகத்தை உலுக்கிவிட்டு சென்றது. காற்று குறைந்த அளவை கொடுத்துவிட்டு அதீத கனமழையை கொடுத்தது இந்த புயல்

சென்னையில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த மழையின் அளவு 400 மி.மீ. என பதிவாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை போல் சென்னையே மிதந்து வருகிறது. புயலும் மழையும் நின்ற நிலையிலும் ஆங்காங்கே மீட்பு பணிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் வருகின்றன.
கழுத்தளவு நீர், 15 அடி நீரில் மக்கள் தத்தளித்து வருகிறார்கள். கழுத்தளவு நீரில் தாமாக வெளியே வருவது எல்லாம் ஆபத்தையே கொடுக்கும் என்பதால் பலர் வெளியேறாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்கள். பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டியுள்ளது.
வெள்ள புயல் நிவாரணமாக முதற்கட்டமாக ரூ 4500 கோடியை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த வெள்ளம் பிரபலங்களையும் விடவில்லை. நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்தை வெள்ளம் சூழ்ந்தது. அது போல் அங்குள்ள நடிகை கஸ்தூரியின் வீட்டையும் வெள்ளம் சூழ்ந்துவிட்டது.

நடிகர் மன்சூர் அலிகான் வீட்டை வெள்ளம் சூழ்ந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மீன்கள் வருவதாகவும் தெரிவித்திருந்தார். நடிகர் விஷாலின் அண்ணாநகர் வீட்டை சுற்றியும் வெள்ளம் சூழ்ந்தது. இந்த நிலையில் ஹாரிஸ் ஜெயராஜின் வளசரவாக்கம் வீட்டையும் வெள்ளம் சூழ்ந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர் சதீஷும் வெள்ளத்தில் சிக்கியுள்ளார். இதனால் அவர் 3 நாட்களாக அக்கா வீட்டில் தங்கிவிட்டு தற்போது தான் தனது வீட்டிற்கு செல்ல போவதாக சதீஷ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். வீட்டில் மின்சாரம் வந்துவிட்டதால் தற்போது வீட்டிற்கு செல்கிறார். என் வீட்டில் காகம், நாய்க் குட்டி, கொசுவெல்லாம் எனக்காக காத்திருக்கும். தேங்காய் எண்ணெய்யை தடவினால் கொசு கிட்டயே வராது என தெரிவித்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications