மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு! சுற்றுலா பயணிகளுக்கு தடை
தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தடையை மீறி குற்றால அருவிக்குள் போகாதவாறு போலீஸார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கர்நாடகாவில் அதிக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ் அணைகள், கபினி உள்ளிட்டவை நிரம்பி வழிந்தன.

இதனால் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டு ஒகேனக்கல் உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டமும் 107 க்கு மேல் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் குற்றாலத்தில் சீசன் மிகவும் நன்றாக உள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்றும் வேகமாக வீசி இருக்கிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் பல்வேறு வாகனங்களில் குற்றாலத்தில் குவிந்தனர். இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் மெயின் அருவியில் பகல் 12 மணிக்கு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் மெயின் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் தண்ணீர் சீராக விழுந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
ஐந்தருவியில் ஆண்களை விட பெண்கள் கூட்டம் அலைமோதியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து குளிப்பதற்கு போலீஸார் அனுமதித்தனர். நேற்று இரவிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீஸார் வெளியேற்றினர். தொடர்ந்து அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications