Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்க கடலில் மாற்றம்.. சுழட்டி சுழட்டி அடிக்கும் காற்று.. தமிழ்நாட்டில் 5 நாளைக்கு மழை: வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் மீண்டும் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

தமிழகத்தின் பல பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.

Weather report Rain Tamil Nadu fishermen Weather News

மழை அறிவிப்பு: நேற்று முன்தினம் சென்னை வானிலை மையம் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது.

அதாவது, தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், இன்று அதாவது, 12ம் தேதி ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

நீலகிரி: மேலும் அந்த அறிவிப்பில், "நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை 13ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.

ஈரோடு, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 14ம் தேதி தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

15 மற்றும் 16ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.

மீண்டும் வாய்ப்பு: இந்நிலையில், தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக மீண்டும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது... இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் 5 நாட்களுக்குக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

அந்த அறிவிப்பில், "இன்று முதல் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

சீற்றம்: தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் இன்று வீசக் கூடும். நாளை (13-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை சூறாவளிக் காற்றுடன் கடல் சீற்றமும் ஏற்படும். அதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜூன் 13 முதல் 17 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதலே மழை பெய்ய போவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+