இனி தான் தரமான சம்பவம் இருக்கு.. சென்னையில் மழை எப்படி? தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்
சென்னை: தமிழகத்தில் இனி தான் பெரிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், சென்னையை பொறுத்தவரை இனி விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும், ஆரம்பத்தில் குறைவான மழையே இருந்தது. இதனையடுத்து தற்போது தான் வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்னும் எத்தனை நாட்கள்: இதேபோல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. என்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை பெய்யும் என்பது குறித்து பிரதீப் ஜான் செய்தி பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- நேற்றைக்கு வட தமிழகத்தில் மட்டும் மழை பெய்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. இதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்தது. ஆனால் இனி வரும் நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
டிசம்பர் முதல் வாரத்தில்: தமிழகத்தை பொறுத்தவரை 21-ம் தேதி வரைக்கு 255 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது 17 சதவீதம் குறைவு ஆகும். ஏன் என்று பார்த்தோமானால் வடகிழக்கு பருவமழையால் அக்டோபரில் மிக குறைவான மழையே பெய்துள்ளது. நவம்பர் மாதத்தை பார்த்தோமானால் ஓரளவுக்கு மழை பெய்துள்ளது. ஆனால் இந்த மாதம் முடிவதற்குள் அதாவது அடுத்த 2 வாரங்களுக்கு தான் மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவம்பர் மாதம் முடிவதற்குள் நல்ல மழை தமிழகத்தில் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக டிசம்பர் மாதம் தொடங்குவதற்குள் மழை அளவு மைனஸ் 17 சதவீதம் என்பது ப்ளஸ் ஆக மாறக்கூடும். உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். மாத இறுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாக இருப்பதால், டிசம்பர் முதல் வாரம் முடிவதற்குள் தமிழகத்தில் மழை அளவு என்பது வழக்கத்துக்கு அதிகமாக இருக்கும்.
சென்னையில் எப்படி: சென்னையை பொறுத்தவரை இதுவரைக்கும் 350 மி.மீ முதல் 400 மி.மீ மழை பெய்துள்ளது. இது சராசரியை விட குறைந்த அளவு தான். குறைவான அளவே மழை பெய்துள்ளது. அக்டோபர் மாதத்தில் சென்னையில் 20 சதவீத மழை தான் பெய்திருந்தது. நவம்பரில் நல்ல மழை பெய்தாலும் சென்னையில் ஓரளவு தான் மழை அளவு இருக்கும். சென்னையில் நீர் நிலைகளை பொறுத்தவரைக்கும் தென் மேற்கு பருவமழையில் அதிக அளவு மழை பெய்ததால் நல்ல நீர் நிலைகளை கொண்டுள்ளது.
இனி வரும் நாட்களில் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும். அதேபோல் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னை அருகே காற்றழுத்த பகுதியோ அல்லது புயலோ இம்மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் காற்றழுத்த நிலை உருவாகினால், நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இருக்கும். இப்போது உள்ள நிலவரப்படி பார்க்கும்போது சென்னையை பொறுத்தவரை விட்டு விட்டு மழையும், இரவு நேரங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
5 நாட்களுக்கு: தமிழ்நாட்டை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இனி வரும் நாட்களில் சென்னை, தென் மாவட்டங்கள் மட்டுமின்றி கொங்கு மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 5 நாட்களுக்கு மட்டுமின்றி தொடர்ந்து தமிழகத்தில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications