‛‛புதுஅலர்ட்’’.. அடுத்த 2 மணிநேரம் முக்கியம்! 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. உங்கள் ஊர் இருக்கா?
சென்னை: தமிழ்நாட்டில் பொங்கலை ஒட்டி பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு வழக்கமாக தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் போதுமான அளவு மழையை கொடுக்கும். ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழையானது, தென்னிந்தியா முழுவதும் 80 சதவிகித மழையை கொடுக்கும். ஆனால் இந்த முறை இது பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. போதிய மழை இல்லாததால் கேரளா சற்று தடுமாறியது. அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவும் குறைந்ததால், மின் பற்றாக்குறை ஏற்பட்டது.

அதேபோல கர்நாடக மாநிலத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் கிருஷ்ண ராஜ சாகர் உள்ளிட்ட அணைகளுக்கு போதுமான அளவு நீர் வரவில்லை. எனவே அங்கிருந்து மேட்டூருக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது. இது தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை பாதித்தது. ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றன.
கேரளா, கர்நாடகாவை ஒப்பிடும்போது தமிழ்நாட்டை பொறுத்த அளவில் அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் ஓரளவு போதுமான அளவு மழையை தென்மேற்கு பருவமழை கொடுத்தது.
இதனை தொடர்ந்து வந்த வடகிழக்கு பருவமழை, தொடக்கம் முதலேயே அதிரடியாக மழையை கொடுத்தது. தமிழ்நாட்டில் மேட்டூர் தவிர ஏறத்தாழ அனைத்து நீர் நிலைகளும் இந்த மழை காரணமாக நிரம்பிவிட்டன. தென் தமிழகத்தில் ஒரே நாளில் அதிக அளவு மழை பெய்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையுடன் வடகிழக்கு பருவமழை விலகிக்கொண்டிருக்கிறது.
எனவே தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. பெரும்பாலான இடங்களில் கடும் குளிரும், பனி மூட்டம் நிலவுகிறது. உதகையில் உறைபனிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. அதாவது, காலை 10 மணிக்குள் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications