அடுத்த 2 மணி நேரம்.. சென்னை டூ ராமநாதபுரம் வரை.. 22 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை இன்று காலையில் இருந்தே மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இன்றும் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை முதல் ராமநாதபுரம் வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை மையம் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்படுகிறது.
இதேபோன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுவை, ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறியது போலவே, இன்று காலை 7 மணியில் இருந்து தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சை, கும்பகோணம், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications