சென்னை டூ குமரி வரை.. மொத்தம் 33 மாவட்டங்கள்.. இன்று மாலை 4 மணி வரை கொட்டப்போகும் மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தென்காசி, மதுரை, விருதுநகர், குமரி என 33 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வரும் 23ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

rain weather chennai

இந்த நிலையில் இன்று மாலை 4 மணி வரை 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், கோவை, மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதேபோல், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலூர், கரூர், அரியலூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+