விடாமல் வெளுத்த வெயிலுக்கு லீவ்.. வானிலை மையம் சொன்னபடி.. தமிழகத்தின் பல இடங்களை ஜில் ஆக்கிய மழை
சென்னை: வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியபடியே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. வெப்பத்தால் தகித்த இந்த மாவட்டங்கள் தற்போது குளிர்ச்சியடைந்துள்ளது.
தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

நெல்லை, தென்காசியில் மழை: அதன்படி, தமிழகத்தில் நேற்று, இன்று என 2 நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் நள்ளிரவு 1 மணியில் இருந்து கனமழை பெய்ய தொடங்கியது.
தொடர்ந்து இன்று இரவு வரை அவ்வப்போது விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பத்தால் தகித்த பகுதிகள் மழையால் குளிர்ந்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வறண்டு கிடந்த அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 2 மாதமாக வற்றிக்கிடந்த குற்றாலம் அருவிகளில் இன்று தண்ணீர் கொட்டுகிறது. இதனால் இன்று ஏராளமானோர் குற்றாலத்தில் குளித்து மகிழ்ந்தனர்.
வானிலை மையம் அறிவிப்பு: இதனை தொடர்ந்து மதிய நேரத்தில் மழை அதிகமாக பெய்ததால், குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் மதியத்திற்கு பின்னர் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது மாலை 4 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தது. இதேபோல் 30 - 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவித்து இருந்தது. அதன்படியே மேற்கண்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இடி மின்னலுடன் மழை: இதேபோல் தேனி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மற்றும் கரூர் மாவட்டத்திலும் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் நள்ளிரவு 1 மணி அளவில் இடி மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு தொடர்ந்தது. அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாபநாசம், வள்ளியூர், களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குமரியில் மழை: இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடையம், செங்கோட்டை, பொட்டல்புதூர், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு வரை மழை பெய்தது. இடையில் சில இடங்களில் மட்டுமே லேசாக வெயில் அடித்தது. இதேபோன்று, நீண்ட நாட்களாக இதுவரை இல்லாத அளவிற்கு வெயில் சுட்டெரித்த கன்னியாகுமரியிலும் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்தது.
மக்கள் நிம்மதி: கோடை வெயில் வாட்டி எடுத்த நிலையில் தற்போது திடீரென குமரியில் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 2 மாதங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. வழக்கத்தை விட நடப்பு ஆண்டில் வெயில்ன் தாக்கம் கொடூரமாக இருந்ததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
சாலைகளில் செல்வதற்கு கூட அச்சப்பட்டனர். இந்த நிலையில் தான் இன்று திடீரென, நாகர்கோவில், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இடி, மின்னலுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பத்தால் தகித்து வந்த மக்கள் இந்த மழையால் சற்று நிம்மதி அடைந்தனர்
நீலகிரி, தேனி: இதேபோல், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. வானிலை மையம் அறிவுறுத்தியது போலவே பல்வேறு இடங்களில் மழை பெய்ததால், நீண்ட நாட்கள் நிலவி வந்த வெப்பம் தணிந்தது. இதனால் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழை அளவு: அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 12 செமீ மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை (திருநெல்வேலி) 8, மாஞ்சோலை (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), ஊத்து (திருநெல்வேலி) தலா 7, நாலுமுக்கு (திருநெல்வேலி) 6, பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 5, அழகரை எஸ்டேட் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி) தலா 4, பர்லியார் (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி),
குந்தா பாலம் (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) தலா 3, கருப்பாநதி அணை (தென்காசி), அடவிநயினார் அணை (தென்காசி), தென்காசி AWS (தென்காசி) தலா 2, தென்காசி (தென்காசி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), ஆயிக்குடி (தென்காசி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), கெத்தை (நீலகிரி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), வலங்கைமான் (திருவாரூர்), பாம்பன் (ராமநாதபுரம்), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), மண்டபம் (ராமநாதபுரம்) தலா 1.
வெயில் அளவு: வெப்பநிலையை பொறுத்தவரை, அதிக பட்ச வெப்பநிலை திருப்பத்தூரில் 41.6° செல்சியஸ் மற்றும் ஈரோட்டில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37° - 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளில் 33° - 37° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 21° - 31° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 36.0° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.9° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications