சென்னை உள்பட தமிழகத்தில் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் குளுகுளு அப்டேட்
சென்னை: தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்று மற்றும் நாளை சென்னை உள்பட தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்தது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்து வந்தது. மற்ற மாவட்டங்களில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்தபடியே வந்தது. இந்த நிலையில் நேற்று சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

குறிப்பாக சென்னை தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், அடையாறு, பெசன்ட் நகர், மந்தைவெளி, கிண்டி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதேபோன்று, செங்கல்பட்டு, எழும்பூர், கிண்டி, மதுரவாயல், மாம்பலம், மயிலாப்பூர், பல்லாவரம், ஆலந்தூர், அமைந்தக்கரை, அயனாவரம், பெரம்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர், தாம்பரம், உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இந்த நிலையில் இன்றும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
24 ஆம் தேதி வரை: அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20.06.2024 மற்றும் 21.06.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
23.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24.06.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று எப்படி?:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அடுத்த ஐந்து தினங்களுக்கு 18.06.2024 முதல் 22.06.2024 வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் / இயல்பை விட அதிகமாகவும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை மதுரையில் 39.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வடதமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35° 39° செல்சியஸ், தென்தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38° 39° செல்சியஸ், வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° 38° செல்சியஸ், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் 32° 35° செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் 21° 28° பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை நுங்கம்பாக்கத்தில் 37.7° செல்சியஸ் (+0.5° செல்சியஸ்) மற்றும் மீனம்பாக்கத்தில் 38.9° செல்சியஸ் (+1.4° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 18.06.2024 முதல் 22.06.2024 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வங்கக்கடல் பகுதிகள்: 18.06.2024: மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19.06.2024: தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 20.06.2024: தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21.06.2024: தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 22.06.2024: தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
20.06.2024: கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 21.06.2023 மற்றும் 22.06.2024: லட்சதீவு பகுதிகள், கேரள கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மழை அளவு: தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): -
மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை) 12, பூந்தமல்லி ARG (திருவள்ளூர்) 11, பூந்தமல்லி (திருவள்ளூர்) 10, சோளிங்கர் (ராணிப்பேட்டை) 9, NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), கொளப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), மீனம்பாக்கம் AWS (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை), ஆலந்தூர் (சென்னை), ஆவடி (திருவள்ளூர்), ACSமருத்துவக்கல்லூரி ARG (காஞ்சிபுரம்) தலா 7, மண்டலம் 14 பெருங்குடி (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி),
வாலாஜா (ராணிப்பேட்டை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 6, மேட்டுப்பட்டி (மதுரை), மண்டலம் 13 U39 அடையார் (சென்னை), காரையூர் (புதுக்கோட்டை), பெரியபட்டி (மதுரை), திருவள்ளூர் (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 5, மண்டலம் 12 மீனம்பாக்கம் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை),
அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை) தலா 4, மேற்கு தாம்பரம் SIT ARG (செங்கல்பட்டு), தரமணி ARG (சென்னை), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), மண்டலம் 14 U41 பெருங்குடி (சென்னை), திருத்தணி (திருவள்ளூர்), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), மின்னல் (ராணிப்பேட்டை), மண்டலம் 12 D156 முகலிவாக்கம் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம்
ARG (சென்னை), திருவூர் AWS (திருவள்ளூர்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), சிட்டம்பட்டி (மதுரை), உதகமண்டலம் (நீலகிரி), மேலாலத்தூர் (வேலூர்), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) தலா 3, திருமங்கலம் (மதுரை), அரக்கோணம் (ராணிப்பேட்டை), YMCA நந்தனம் ARG (சென்னை), கூடலூர் பஜார் (நீலகிரி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), தேவாலா (நீலகிரி), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), திருத்தணி PTO (திருவள்ளூர்), விராலிமலை (புதுக்கோட்டை), தல்லி (கிருஷ்ணகிரி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்),
தோகமலை (கரூர்), பொன்னை அணை (வேலூர்), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), மண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), ஆலங்குடி (புதுக்கோட்டை), மேல் கூடலூர் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), டிஜிபி அலுவலகம் (சென்னை), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை) தலா 2, மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), மண்டலம் 05 GCC (சென்னை),
வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), மதுரை விமானநிலையம் (மதுரை), கோத்தகிரி (நீலகிரி), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), சோழவரம் (திருவள்ளூர்), மண்டலம்3 அடையார் (சென்னை), கீரனூர் (புதுக்கோட்டை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்),
மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), குடிமியான்மலை (புதுக்கோட்டை), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), கின்னக்கோரை (நீலகிரி), மண்டலம் 02 D15 மணலி (சென்னை), சிங்கம்புணரி (சிவகங்கை), குடியாத்தம் (வேலூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), செங்குன்றம் (திருவள்ளூர்), சாத்தியார் (மதுரை). பெருங்களூர் (புதுக்கோட்டை) சென்னை நுங்கம்பாக்கம் தலா 1. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கோடைக்கு நடுவே கொட்டும் குளுகுளு மழை.. இந்த மாவட்டங்களில் ஜில் கிளைமேட் தான்.. வானிலை மையம் அலர்ட் -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை?












Click it and Unblock the Notifications