சென்னையே பூரிக்குது.. செம்பரம்பாக்கத்துக்கு போன நியூஸ்.. புழல் தரும் நற்செய்தி.. என்னன்னு பாருங்க
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தமிழகத்தில் மழைப்பொழிவு பெருகி வருகிறது.. இன்னும் அடுத்தடுத்த நாட்களுக்கு மழை அதிகமாகவே இருக்கும் என்றும் அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

நிரம்பும் ஏரிகள்: இன்றைய தினம், தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.
அதன்படி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மாநிலம் முழுவதும் மழைப்பொழிவு அதிகமாக உள்ள நிலையில், அதற்கேற்ற முன்னேற்பாடுகளிலும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.
மற்றொருபக்கம், குடிநீர் ஆதாரமும் பெருகி வருகிறது.. குறிப்பாக, சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
5 ஏரிகள்: இந்த 5 ஏரிகளிலுமே, கிட்டத்தட்ட 11,757 மி.கனஅடி தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.. அந்தவகையில், இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் மொத்தம் 8895 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளவில் 75 சதவீதமாகும்..
இப்பாது, பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டிவருகிறது.. அந்தவகையில், கடந்த 3 நாட்களாகவே மழை அதிகரித்து, ஏரிகளிலும் குடிநீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 436மி.கனஅடிதண்ணீர் உள்ளது. இப்போது ஏரிக்கு 20 கனஅடி தண்ணீர் வருவதால், 10 கனஅடி கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடியாக உள்ள நிலையில், 1874 மி.கனஅடி தண்ணீர் தற்போது உள்ளது.. 210 கனஅடி தண்ணீர் வருவதால், 68 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது..
புழல் ஏரி: புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடியாக உள்ள நிலையில், இப்போதைக்கு 2755 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. எனவே, 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல, சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1080 மி.கனஅடியாக உள்ள நிலையில், 692மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடியாக உள்ள நிலையில், 3138 மி.கனஅடி தண்ணீர் தற்போது உள்ளது. இன்று காலை நீர்வரத்து 451 கனஅடியாக அதிகரித்தது. எனவே, 162 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
பெருத்த நம்பிக்கை: ஆக, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை நீர்மட்டம் மறுபடியும் எட்டியிருக்கிறது. இனி அடுத்தடுத்த நாட்களிலும், சென்னையில் மழை அதிகரிக்கும் என்பதால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.. குடிநீர் ஆதாரங்கள் அதிகரித்துள்ளதால், சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருக்காது என்றும் நம்பப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications