இன்றிரவு "டமால் டுமீல்" சம்பவம்.. சென்னை உட்பட பல பகுதிகளில் வெளுக்க போகுது கனமழை.. வெதர்மேன் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்றைய தினமும் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கு மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். காலையில் வெப்பம் அதிகமாக இருந்தாலும் கூட மாலை அல்லது இரவு நேரங்களில் மழை கொட்ட வாய்ப்பு இருப்பதாக அவர் இப்போது வார்னிங் கொடுத்துள்ளார்.

கோடைக் காலம் முடிந்ததில் இருந்தே மழை மெல்ல அதிகரித்து வரும் நிலையில், இது மக்களுக்கு உற்சாகத்தைத் தருவதாக இருக்கிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

tamilnadu weatherman weather rain

இதனால் அணைகளிலும் நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். வரும் நாட்களிலும் மழை தொடரும் என்றே வானிலை மையமும் தெரிவிக்கிறது.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்: இதற்கிடையே பகல் நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் நல்ல வெப்பம் நிலவும் என்றும் மாலை நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில், "இன்று பிரகாசமான வெயில் அதிகம் இருக்கும் நாள்.. பகலில் ஓவர் வெயில் என்றால் மாலை மற்றும் இரவு நேரத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் என்ன நடக்கும் என நான் தனியாகச் சொல்ல எதுவும் இல்லை.. உங்களுக்கே தெரியும்.

மழை கொட்டும்: தமிழகத்திற்குப் பல பகுதிகளில் டமால் டுமீல் மழை பெய்யப் போகும் நாளாக இன்று இருக்கப் போகிறது. கேடிசிசி (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு), வேலூர், ராணிப்பேட்டை- திருவண்ணாமலை, பெல்ட்கள், சேலம் - நாமக்கல் - ஈரோடு பெல்ட்கள், கொடைக்கானல்- மதுரை- சிவகங்கை- புதுக்கோட்டை பெல்ட்கள் டெல்டா பெல்ட்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி (தேவாலா- பந்தலூர்- கூடலூர்- அவலஞ்ச் பெல்ட்), வால்பாறையில் பருவ மழை தொடரும்.

காவிரி அணை: மேலும், கபினி அணையின் உபரி நீர் மேட்டூருக்கு வருகிறது, மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.. இதனால் கர்நாடகாவில் காவிரி அணைகளுக்கு வரும் நீர் வரத்து அதிகரிக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ஜூலை 12, 13 தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர் தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 14 முதல் 17 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+