சென்னையை சூழும் கருமேகங்கள்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் கொட்டும் மழை.. எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலையே நிலவுகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் சென்னை புறநகர் உட்பட 13 பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்த உடனே பருவமழை தொடங்கிவிட்டது. மாநிலம் முழுக்க பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இடையில் சில வாரம் மழை இல்லாத போதிலும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

weather chennai rain

இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, சென்னை புறநகர் உட்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

13 மாவட்டங்களில் மழை: அதாவது இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி, டிராபிக் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சூழும் மழை மேகங்கள்: சென்னையை பொறுத்தவரை திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, நந்தனம், முகப்பேறு என பல பகுதிகளில் கருமேகம் சூழந்துள்ளன. அதேநேரம் கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் ஏற்கனவே மழை தொடங்கிவிட்டது. இரவு 7 மணி வரை மழை கொட்டும் என்பதால் ஆபீஸில் இருந்து வீடு திரும்புவோர் கவனம்.

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

வானிலை மையம்: இதனால் இன்று அக். 24ம் தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அக். 25ம் தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+