சென்னையை சூழும் மழை மேகங்கள்.. ஒரு வாரத்திற்கு பிறகு இன்று பெரிய சம்பவம்.. வெதர்மேன் ஹேப்பி நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. அதேநேரம் சென்னை மற்றும் புறநகரில் கடந்த ஒரு வாரமாகப் பெரியளவில் மழை இல்லாமல் இருந்தது. இதற்கிடையே இன்றைய தினம் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை நோக்கி மழை மேகங்கள் வருவதால் இன்று நிச்சயம் நல்ல மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கோவை, நீலகிரி உட்பட மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களை ஓட்டிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

வெதர்மேன்: சென்னை, புறநகர்ப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.. இருப்பினும், கடந்த சில நாட்களாகச் சென்னையில் பெரியளவில் மழை இல்லாமல் இருந்தது. இதற்கிடையே மீண்டும் சென்னை உட்பட கேடிசிசி பெல்ட் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மழை இருக்கு: இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில், "கேடிசிசி (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு) பகுதிகளை நோக்கி மழை மேகங்கள் வந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாகிவிட்டது.. ஆனால், இன்று கேடிசிசி KTCC மற்றும் பாண்டி-கடலூர் பெல்ட் மழை மேகங்களைக் காண்கிறது. மழை வேகமாக நகரும்.. சில நேரங்களில் பலத்த காற்று வீசும். இந்த சில் கிளைமேட்டை என்ஜாய் செய்யுங்கள்.
இதற்கிடையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து.. தற்போது கபினி ஆற்றின் நீர்வரத்து 75000 கன அடியாக (கபினி அணை 70000 மற்றும் நுகு அணை 5000 கன அடி) அதிகரித்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தினசரி செய்திக் குறிப்பிலும் கிட்டதட்ட இதே தான் கூறப்பட்டு இருந்தது. அந்த செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிகக் கன முதல் அதி கனமழையும்: கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
மழை இருக்கு: நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும்; கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. ஜூலை 20 முதல் ஜூலை 24 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications