வெளியில் போனா குடை இல்லாமல் போகாதீங்க.. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கு! வெதர் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 18 ஆம் தேதி புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புத்தாண்டு தொடங்கியதில் இருந்து பெரிதாக மழை இல்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது.

பொங்கல் தினமான நேற்றும் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இன்று காலையிலும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
* இன்று (15-01-2025) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 18-01-2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
21 ஆம் தேதி வரை மழைக்கு சான்ஸ்
* 19-01-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* 20-01-2025: தென்ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும்
* 20-01-2025: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 21-01-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் 2 நாட்கள் மழை:
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (15-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
* நாளை (16-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை அளவு:
* தென்தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஊத்து (திருநெல்வேலி) 7, நாலுமுக்கு (திருநெல்வேலி) 6, காக்காச்சி (திருநெல்வேலி) 5, மாஞ்சோலை (திருநெல்வேலி) 4, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) 3, பாம்பன் (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்) 2,
* வேதாரண்யம் (நாகப்பட்டினம்), சிவகாசி (விருதுநகர்), பரமக்குடி (ராமநாதபுரம்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), சேது பாஸ்கரா அக்ரி கல்லூரி AWS (சிவகங்கை), அருப்புக்கோட்டை (விருதுநகர்), சிவகங்கை (சிவகங்கை), கோடியக்கரை (நாகப்பட்டினம்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), வேடசந்தூர் (திண்டுக்கல்), புகையிலை நிலையம் (VDR) (கிண்டுக்கல்) வே சந்கார் AWS (திண்டுக்கல்) ஆண்டிபட்டி(தனி)வேகராண்யும் AWS
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 15-01-2025 மற்றும் 16-01-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 17-01-2025 முதல் 19-01-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்: 15-01-2025 முதல் 19-01-2025 வரை; எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications